ஜம்மு –காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்  ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற பயங்கர சண்டையில் 8 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் போலீஸ் குடியிருப்பு கட்டடத்தை குறிவைத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீவிரவாதிகள்  பயங்கர தாக்குதல் தாக்குதல் நடத்தினர்.

கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக  தீவிரவாதிகள் தாக்கினர்.  இந்த தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு போலீசார் உட்பட பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும், மேலும் 7 வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.