கர்நாடக சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் 17 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் மாஸ்கி ஆகிய இருதொகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை
கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: லைவ் அப்டேட்

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. அதன் லைவ் அப்டேட்..
இடைத்தேர்தல் நடைபெறாத இருதொகுதிகள்
ஆறுதல் வெற்றி பெற்ற காங்கிரஸ்
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் சிவாஜி நகர் மற்றும் ஹன்சூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
3 தொகுதிகளில் தோல்வியடைந்த ஆளும் கட்சி
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் சிவாஜி நகர், ஹோஸ்கோட் மற்றும் ஹன்சூர் தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது.
பாஜக வென்ற 12 தொகுதிகள்
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் எல்லாப்பூர், ரானேபென்னுர், விஜயநகர, யஷ்வந்த்பூர், மஹாலட்சுமி லேஅவுட், சிக்கபல்லபுரா, கே.ஆர்.புரம், கே.ஆர் பீட், அதானி, காக்வாட், கோகக், ஹிரேகூர் ஆகிய 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
மண்ணை கவ்விய மதஜ
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் கடந்த ஆண்டு ஆட்சியை இழந்த மஜத தற்போது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது
34 இடங்களில் மதஜ
கர்நாடக சட்டமன்றத்தில் 3 தொகுதிகளை இழந்து மதஜவின் பலம் 34 ஆக குறைந்துள்ளது
68 இடங்களில் காங்கிரஸ்
கர்நாடக சட்டமன்றத்தில் தற்போது காங்கிரஸின் பலம் 68 ஆக குறைந்துள்ளது
117 இடங்களில் ஆளும் பாஜக
கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களுக்கும் மேலாக 4 இடங்களை கூடுதலாக வென்றுள்ளது எடியூரப்பா தலைமையிலான அரசு
பாஜக 12, காங்கிரஸ் 2, சுயேட்சை 1
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஆளும் பாஜக 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பாஜகவிற்கு சுயேட்சை வேட்பாளர் ஆதரவு
ஹோஸ்கோட் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கும் சுயேட்சை வேட்பாளர் சரத் ஆளும் பாஜகவை ஆதரிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது
காங்கிரசை மக்கள் தண்டித்துள்ளனர்-பிரதமர் மோடி
கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் வெளி வந்திருக்கும் நிலையில் காங்கிரசை மக்கள் தண்டித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
பாஜக தலைமையகத்தில் குவிந்த தொண்டர்கள்
அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பாஜக தொண்டர்கள் பெங்களுருவில் இருக்கும் தலைமையகத்தில் குவிந்து வருகின்றனர்
ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி..!
ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத் வெற்றி பெற்றுள்ளார்
விஜய நகரில் பாஜக வெற்றி
விஜய நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆனந்த் சிங் வெற்றி பெற்றுள்ளார்
ஆட்சியை தக்க வைத்த பாஜக
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடியூரப்பா ஆட்சியை தக்க வைத்துள்ளார்
திடீர் அதிர்ச்சியில் பாஜக
சிவாஜி நகர் மற்றும் ஹன்சூர் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது
ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் தொடர் முன்னிலை..!
ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்
3 தொகுதிகளையும் இழந்த மஜத
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்த 3 தொகுதிகளையும் சேர்த்து 15 தொகுதிகளிலும் மஜத கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது
உற்சாகத்தில் கர்நாடக பாஜக
இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளதால் கர்நாடக பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
விஜயநகரில் வெற்றியை நெருங்கும் பாஜக
விஜயநகர தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆனந்த் சிங் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்