Asianet News TamilAsianet News Tamil

ரூ.500 கோடியை ஆட்டையை போட்ட கல்கி சாமியார்... எல்ஐசி ஏஜெண்டின் அதிரவைக்கும் பகீர் பின்னணி..!

ஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. ஆசிரமம் அமைப்பதற்கு முன்பு விஜயகுமார் சாதாரண எல்ஐசி ஏஜென்டாக பணியாற்றி வந்தார். பின்னர், கடந்த 1989-ம் ஆண்டு, `நான் விஷ்ணுவின் அவதாரம். என் பெயர் கல்கி பகவான்’’ என தனக்குத்தானே பறை சாற்றிக் கொண்டார். பின்பு, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நேமம் கிராமத்தில் சிறிய அளவில் கல்கி ஆசிரமத்தை தொடங்கினார்.

Kalki Ashram...income tax caught rs 500 crores
Author
Andhra Pradesh, First Published Oct 18, 2019, 4:06 PM IST

கல்கி ஆசிரமத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையின் போது கணக்கில் வராத ரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. ஆசிரமம் அமைப்பதற்கு முன்பு விஜயகுமார் சாதாரண எல்ஐசி ஏஜென்டாக பணியாற்றி வந்தார். பின்னர், கடந்த 1989-ம் ஆண்டு, `நான் விஷ்ணுவின் அவதாரம். என் பெயர் கல்கி பகவான்’’ என தனக்குத்தானே பறை சாற்றிக் கொண்டார். பின்பு, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நேமம் கிராமத்தில் சிறிய அளவில் கல்கி ஆசிரமத்தை தொடங்கினார். 

Kalki Ashram...income tax caught rs 500 crores

இந்த ஆசிரமத்துக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா எனப் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மக்கள் குவிந்தனர். விஜயகுமார் குறுகிய காலத்தில் உலகளவில் பிரபலமடைந்தார். வசதி வந்த உடன் ஆந்திர மாநிலம் வரதய்யாபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி ஆசிரமத்தை நிறுவினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை தொடங்கி நடத்தி வருகிறார். இவருக்கு, சென்னையில் மட்டும் 20 இடங்களில் கிளைகள் உள்ளன.

Kalki Ashram...income tax caught rs 500 crores

இந்நிலையில் கல்கி ஆசிரமத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக நன்கொடை என்ற பெயரில் பணம் வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் அந்த பணத்தை வெளிநாட்டு பக்தர்கள் பெயர்களில் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக தகவல் வெளியானது. 

Kalki Ashram...income tax caught rs 500 crores

இதனையடுத்து, கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் 400 அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையின் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முடிவில் கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடி வருமானம் ஈட்டப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.43.9 கோடியும், ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.22 கோடி மதிப்புள்ள 33 கிலோ தங்கமும், ரூ.5 கோடி மதிப்புள்ள வைரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
Follow Us:
Download App:
  • android
  • ios