ஹெல்மெட் ஏன் போடல..? பெண்ணிடம் கேள்வி கேட்ட போலீசாருக்கு  என்ன நடக்குதுநு பாருங்க....

இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் காவலரிடம் அத்துமீறி  நடந்துக்கொண்ட சம்பவம் குறித்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு  வருகிறது.

பொதுவாகவே,போக்குவரத்து காவலர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்  வைக்கப்படுவது வழக்கம்.

இந்நலையில், போக்குவரத்து ஆய்வாளர்களின் வேலையை கூட சரி வர  நேர்மையாக செய்ய முடியாதபடி நடந்துகொள்ளும் சில நபர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது இந்த வீடியோ.

ஹைதராபாத் நகரில் உள்ள மல்காபட் ஆர்.டி.ஏ அலுவலகம் அருகே போக்குவரத்து காவலர்கள்  அவர்களுடைய பணியில் ஈடுபட்டு வந்தனர்

அப்போது சற்று தூரத்தில் வந்துக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் வந்த இவர்கள், போலிசை பார்த்தவுடன் விரைவாக  அப்படியே திரும்பி செல்ல முயன்று உள்ளனர் அதற்குள், போலீசார் அவர்களின் அருகே வர, "ஹெல்மெட்  ஏன் போடவில்லை என கேள்வி எழுப்ப....பின்ப்க்கம் அமர்ந்து இருந்த சையதா ஜரினா  என்ற பெண் ஆத்திரம் அடைந்து காவலரை அசிங்கமாக தொடங்கி உள்ளார்.

வழி விடுங்கள்....நாங்கள் போக வேண்டும் என குறியாக இருந்துள்ளார் அந்த பெண். அது மட்டுமில்லாமல், காவலரை தன் கைகளால் தள்ளிவிட்டு அங்கிருந்து புறப்பட  முயல்வதும், அசிங்கமாக திட்டியும் பேசி உள்ளார் அந்த பெண்மணி.

பின்னர் அங்கு வந்த பெண் போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது.

நடந்த சம்பவத்திற்கு அந்த பெண் மன்னிப்பு கோரி இருந்தும்,காவலர்கள் அவர்களுடைய பணியை செவ்வென செய்து முடித்து உள்ளனர்.