Asianet News TamilAsianet News Tamil

ஜியோ வாடிக்கையாளர்களும் தப்பிக்க முடியாது: ஏர்டெல், வோடஃபோன் ஐடியாவைத் தொடர்ந்து ரிலையன்ஸ் கட்டணம் உயருது:

டிசம் 1-ம்தேதி வெய்ட் பண்ணுங்க வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டல் நிறுவனங்களைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் தன்னுடைய மொபைல் சர்வீஸ் ரேட் அனைத்தையும் உயர்த்தப்போவதாக அறிவத்துள்ளது.
 

joi phone chare will be increase
Author
Mumbai, First Published Nov 20, 2019, 7:48 AM IST

ஆனால், எந்த அளவுக்கு மொபைல் சர்வீஸ் ரேட் உயர்த்தப் போகிறது என்பதுகுறித்து அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 
நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதத்தோடு முடிந்த 2-வது காலாண்டில் வோடஃபோல் ஐடியா நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனங்களில் 2-வது மிகப்பெரிய இழபப்பைச் சந்தித்தது. 

வரி தொடர்பான வழக்கில் தொலைத்தொடர்புத் துறைக்கு செலுத்த  வேண்டிய நிலுவையை வோடஃபோன் நிறுவனம் செலுத்த  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிட்டது. இதனால் வோடஃபோல் ஐடியா நிறுவனம் ஏறக்குறைய ரூ.50 ஆயிரத்து 921 கோடி இழப்பைச் சந்தித்தது.

joi phone chare will be increase
இந்நிலையில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பையும், பணநெருக்கடியையும் வாடிககையாளர்கள் மேல் சுமத்த வோடஃபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் மொபைல் சர்வீஸ் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. 

அதேபோல பார்தி ஏர்டெல் நிறுவனமும் தனது மொபைல் சர்வீஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித்தது. இந்நிலையில் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவும் மொபைல் சர்வீஸ், அழைக்கட்டணம், டேட்டா கட்டணம் ஆகியவற்றை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

joi phone chare will be increase
இதுகுறித்து ஜியோ நிறுவனம் ெவளியிட்ட அறிவிப்பில், “ மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களைப் போல், அரசுடன் நாங்களும் ஒத்துழைத்து, ஒழுங்குமுறை வாரியத்தின் விதிமுறைகளை கடைபிடித்து தொலைத் தொடர்பு துறையை வலிமைப்படுத்தி, இந்திய வாடிக்கையாளர்களுக்கு நலன் சேர்க்க இருக்கிறோம். 

joi phone chare will be increase

ஆதலால், அடுத்த சில வாரங்களில் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாள்களின் அழைப்பு, டேட்ா, வாடகை உள்ளி்ட்ட கட்டணத்தை மாற்றி உயர்த்த இருக்கறோம். இந்த கட்டண உயர்வால் இன்டர்நெட் டேட்டா பயன்பாடு, ஜிடிட்டல் முறையின் வளர்ச்சி, முதலீட்டை தக்கவைத்தலில் எந்தவிதமான பாதகத்தையும் ஏற்படுத்தாது என எண்ணுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios