ஜார்க்கண்டில்  ஆசிரியர் தலைமை வெட்டி எடுத்துக் கொண்டு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கெலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் உள்ள கப்ரசாய் துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக சுக்ரா ஹெசா பணியாற்றி வருகிறார். நேற்று பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டபோது அங்கு திடீரென வந்த ஹரி ஹெம்பிராம்(26) சுக்ராவை பிடித்து இழுத்துச் சென்றார்.தனது வீட்டிற்கு அருகில் சென்ற பிறகு தான் அவர் வைத்திருந்த அரிவாளால் ஆசிரியையின் தலையை துண்டித்தார். இதன் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்கொண்டு சுமார் 5 கிலோமீட்டர் எடுத்துச் சென்றார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை தேடிய போது அவர் ஆசிரியையின் தலையுடன் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஹரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தகவல் தெரியவந்துள்ளது.