Asianet News TamilAsianet News Tamil

ஒண்ணு விடாம இடிங்க... வீட்டைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் கட்சி ஆபீஸையும் தரைமட்டமாக ஜெகன் மோகன் உத்தரவு..!

தெலுங்குதேசம் கட்சி அலுவலகம் விதிமுறைகளை மீறி கட்டுப்பட்டுள்ளதால் அதனை இடித்து தள்ள ஜெகன்மோகன் அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
 

Jagan Mohan orders Chandrababu Naidu's party office
Author
India, First Published Jul 2, 2019, 1:06 PM IST

தெலுங்குதேசம் கட்சி அலுவலகம் விதிமுறைகளை மீறி கட்டுப்பட்டுள்ளதால் அதனை இடித்து தள்ள ஜெகன்மோகன் அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 Jagan Mohan orders Chandrababu Naidu's party office

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் அமராவதி நகர் கிருஷ்ணா நதியோர பங்களா, ‘சட்டத்துக்குப் புறம்பாக' கட்டப்பட்டுள்ளது என்று சொல்லி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு, சில நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸ் குறித்து, ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக சந்திரபாபுநாயுடு கட்டிய பிரஜா வேதிகா கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கினார் ஜெகன் மோகன் ரெட்டி. Jagan Mohan orders Chandrababu Naidu's party office
 
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் விசாகப்பட்டிணம் நகர அலுவலகத்தில், சட்டத்துக்குப் புறம்பாக கட்டுமானப் பணிகள் நடந்துள்ளதாக தெரிவித்து ஆந்திர அரசு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ள விசாகப்பட்டிணம் கார்ப்பரேஷன், “தெலுங்கு தேசம் கட்சி, சட்டத்துக்குப் புறம்பாக இரண்டு மாடிகளைக் கட்டியுள்ளது. அது குறித்து முறையான அனுமதியோ, ஆவணங்களோ இல்லை. இந்த விவகாரத்தில் அந்த கட்சி சார்பில் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். அப்படி அளிக்கப்படாத பட்சித்தில், சட்டத்துக்குப் புறம்பாக இருக்கும் இடம் அகற்றப்படும்” என்று தெரிவித்துள்ளது. Jagan Mohan orders Chandrababu Naidu's party office

இந்த விஷயம் குறித்து தெலுங்கு தேசத்தின் விசாகப்பட்டிண செயலாளர், ரெஹ்மான் பேசுகையில், “தற்போது எங்கள் அலுவலகம் இருக்கும் இடமானது, கடந்த 2002 ஆம் ஆண்டு குத்தகைத்து எடுக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, ஆண்டுக்கு 2,500 ரூபாய் செலுத்தி வருகிறோம். ஆந்திர பிரதேச அரசுக்குச் சொந்தமான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம். தற்போது எங்களுக்கு வந்துள்ள நோட்டீஸ் குறித்து விரைவில் அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.Jagan Mohan orders Chandrababu Naidu's party office

கிட்டத்தட்ட இந்த அலுவலகம் விரைவில் இடித்து தரைமட்டமாக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios