நடிகை ஸ்ரீரெட்டி, அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பவன் கல்யாணை சகோதரராக கருதியது தவறு என்று கூறி தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டார். ஸ்ரீரெட்டி தன்னை செருப்பால் அடித்துக் கொண்டதன் மூலம் மீண்டும் பரபரப்பை ஏறப்டுத்தி உள்ளார்.

தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த தெலுங்கு திரையுலக பிரபலங்களை ஸ்ரீ லீக்ஸ் மூலம் அடுத்தடுத்து அம்பலப்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது அரை நிர்வாணப் போராட்டம் காரணமாக தெலுங்கு திரைப்பட உலகம் அதிர்ச்சி அடைந்தது. தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீதும் அடுக்கடுக்கான புகார்களை அவர் கூறியிருந்தார்.

தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை பிரபலங்கள் படுக்கைக்கு அழைக்கும் அவலத்தை நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இயக்குநர் சேகர் கமுல்லா, நடிகர் ராணாவின் தம்பி ஆகியோரைத் தொடர்ந்து திரைக்கதாசிரியர் கோனா வெங்கட் மீது நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்தார். பிரபல திரைக்கதாசிரியரும், இயக்குநருமான கோனா வெங்கட் தன்னிடம் அசடு வழிந்த வாட்ஸ்-அப் உரையாடலை  பகிர்ந்து  ஸ்ரீரெட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், ''நடிகை ஸ்ரீரெட்டி தனது பிரச்சனை உண்மை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும், தொலைக்காட்சிகளில் இதுபோன்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்துவது சரியல்ல, தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது என கூறியிருந்தார்.

பவன் கல்யாணின் பேச்சால் ஆத்திரமடைந்த நடிகை ஸ்ரீரெட்டி, இதற்கு கண்டனம் தெரிவித்து திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு வருத்தப்படுகிறேன் என்றார்.

அவரை சகோதரராக கருதியதற்கு என்னையே நான் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டுன்று கூறியதுடன், காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி, பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு செருப்பால் அடித்துக் கொள்கிறேன் என்று கன்னத்தில் செருப்பால் அடித்துக் கொண்டார். அப்போது அவர் சில தவறான செய்கையையும் காண்பித்தார்.

நடிகை ஸ்ரீரெட்டி, செய்தியாளர்கள் முன்பாக தன்னை செருப்பால் அடித்துக் கொண்டதன் மூலம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளார். இந்த நிலையில், நடிகர் பவன் கல்யாணை, விமர்சனம் செய்த ஸ்ரீரெட்டியை அவரது ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.