காதலனுடன்   உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இளம் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.  மும்பையில் உள்ள பிரபல ஓட்டலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த 23 வயதான ஓரிரான் யக்கோவ் தனது 20 வயதே ஆன காதலியுடன் இந்தியாவை சுற்றிப் பார்க்க வந்துள்ளார்.

மராட்டிய மாநிலத்திற்கு சென்ற அவர் மும்பை கொலாபா பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது காதலியுடன் தங்கியுள்ளார். அங்கிருந்தபடி மும்பையின் பல்வேறு இடங்களை இருவரும் சுற்றிப்பார்த்துள்ளனர்.

 இந்த நிலையில் மும்பையை சுற்றிப்பார்த்துவிட்டு இரவில் ஓட்டலுக்கு வந்த காதலர்கள் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது காதலன் ஓரிரான், தனது காதலியை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இருவரும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்த போதே திடீரென காதலிக்கு மூச்சின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பயந்து போன ஓரிரான் உடனடியாக ஓட்டல் நிர்வாகத்தை அழைத்து தனது காதலிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார்.

 அவர்கள் வந்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனை அடுத்து விபத்தின் மூலமாக உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்கிற பிரிவில் ஓரிரான் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் செக்சின் போது தனது காதலி உயிரிழந்த தகவலை ஓரிரான் போலீசிடம் மறைத்துள்ளார். ஆனால் ஓரிரான் காதலியின் பிரேதப்பரிசோதனை மற்றும் தடயவியல் சோதனையை தொடர்ந்து உண்மை வெளிப்பட்டது.

 காதலியுடன் மிக தீவிரமான முறையில் காதலன் ஓரிரான் உடலுறவு கொண்டது பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. மேலும் உடலுறவின் போது காதலன் ஓரிரான், தனது காதலியின் கழுத்தை அழுத்தி பிடித்துள்ளார். இதனால் மூச்சுவிட முடியாமல் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இளம் பெண்ணிண் மரணத்திற்கு காரணமாக அமைந்ததாக ஓரிரான் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் ஓரிரான் தனது விசா முடிந்து இஸ்ரேல் சென்றுவிட்டார். இதனால் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.