செல்பி எடுக்கும்போது விரலைக் காட்டி எடுக்க வேண்டாம் என்றும் அப்படி எடுக்கும் பட்சத்தில் உங்கள் ரேகையை திருடப்படும் என்றும் என்ற எச்சரிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதன் உண்மைத்தன்மை குறித்து என்னவென்று தெரியாமல் பெரும்பாலோர் இருந்து வந்தனர். 

இ்ந்த நிலையில், ஐ.பி.எஸ். ரூபாவும் இதே எச்சரிக்கை விடுத்துள்ளார். சசிகலா இருக்கும் சிறையில் வசதிகள் அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டவர்தான் இந்த ஐபிஎஸ் ரூபா. இது குறித்து அவர் விளக்கமும் அளித்துள்ளார்.

கைவிரல்கள் தெரியும்படி புகைப்படங்கள் எடுக்கும்போது, அவற்றில் உள்ள விரல்களை பெரிதுபடுத்தி, அவற்றில் உள்ள ரேகைகளை நகலெடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.

தவறு நடக்கும் இடங்களில் போலீசாரின் கவனத்தை திசை திருப்ப அந்த ரேகைகளை விட்டுச்செல்ல வாய்ப்புள்ளதாகவும் ஐபிஎஸ் ரூபா கூறியுள்ளார். ரூபாவின் இந்த விளக்கத்தைப் படித்தவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎஸ் ரூபா கூறுவது போன்ற எச்சரிக்கை பற்றி மத்திய அரசு இதுபற்றி எதுவும் இன்னும் கூறவில்லை. தற்போது ரூபா வெளியிட்ட இந்த எச்சரிக்கைக்கு பலர் பலவித விமர்சனங்கள் கூறி வருகின்றனர்.