Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலால் பதற்றம்... எல்லையில் படைகளைக் குவித்த இந்திய ராணுவம்..!

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   
 

Indian Air Force  on the border
Author
Kashmir, First Published Aug 20, 2019, 3:45 PM IST

ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  Indian Air Force  on the border

இதையும் படியுங்கள்:- வெள்ளத்தில் மூழ்கி அழியப்போகும் தென்னிந்தியா... அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்..!

எல்லையில் உள்ள நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து மோர்டார்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. காலை 11 மணியளவில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.  மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக கடைசியாக கிடைத்த தகவல் தெரிவித்துள்ளது.Indian Air Force  on the border

இதையும் படியுங்கள்:-பெங்களூருவில் பயங்கர ’நில அதிர்வு’... பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..!

இந்நிலையில், பாகிஸ்தான் எந்த அத்துமீறலில் ஈடுபட்டாலும், அதனை முறியடிக்கும் வகையில், எல்லையில் இந்திய விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி தன்னோவா தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், எதிரி நாடு நடமாட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விமானப்படை உஷாராக உள்ளது. பயணிகள் விமானம் எல்லையை தாண்டி வந்தாலும், அந்த சூழ்நிலையை கருதி, நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்’’ என அவர் கூறினார்.Indian Air Force  on the border

ஏற்கெனவே, ராணுவ தளபதி பிபின் ராவத்தும், பாகிஸ்தான் எந்த போரை தொடுத்தால் அதனை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளதாகவும் இதனால், பாகிஸ்தான் எந்த அத்துமீறலிலும் ஈடுபடக்கூடாது’’ எனத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   

இதையும் படிங்க:- ஒரே ஒரு நிகழ்ச்சி...ஓஹோ புகழ்... உலக சாதனை படைத்த பிரதமர் மோடி..!


 

Follow Us:
Download App:
  • android
  • ios