Asianet News TamilAsianet News Tamil

உலகிற்கே முன்னுதாரணம் ஆகி இருக்கிறோம்..! பிரதமர் மோடி பெருமிதம்..!

வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் என்று கூறியுள்ள பிரதமர் மோடி இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் உலகநாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருவதாக கூறியுள்ளார்.

india becomes rolemodel to world, says pm modi
Author
New Delhi, First Published Apr 3, 2020, 9:43 AM IST

கடந்த மாதம் 23ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலமாக உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நள்ளிரவு முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்தநிலையில் இன்று காலை 9 மணியளவில் பிரதமர் மோடி மீண்டும் மக்களிடம் உரையாற்ற இருப்பதாக அறிவித்தார்.

india becomes rolemodel to world, says pm modi

அதன்படி பிரதமர் இன்று காணொளி வெளியிட்டார். அதில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கிற்கு மக்கள் பெரும் ஒத்துழைப்பு தருகிறார்கள் என்றும் ஊரடங்கு உணர்வை மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி என கூறியிருக்கிறார். மேலும் மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த யுத்தம் நடத்தியதற்கும் நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

india becomes rolemodel to world, says pm modi

மக்கள் அனைவரும் வீட்டில் ஒன்றிணைந்து இருந்தால் மட்டுமே கொரோனா நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று நிலையில் நாடே தற்போது ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தி இருப்பதாக கூறினார். வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் என்று கூறியுள்ள பிரதமர் மோடி இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் உலகநாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருவாதாக கூறியுள்ளார்.

மேலும் வரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்து விட்டு டார்ச் லைட், அகல் விளக்குகளை எரிய செய்ய வேண்டும் எனவும் அந்த நேரத்தில் நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios