எட்டாம் வகுப்பு மட்டுமே படித்து, நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், ஷாமி மாவட்டத்தில் ஆர்யன் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. 8 ஆம் வகுப்பு வரை படித்த ஒருவர்தான் இந்த மருத்துவமனையின் உரிமையாளர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சையை இவர் செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு நோயாளி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் கூறப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளப்பட்டதாக தெரிகிறது.

இதனை படம் பிடித்த நபர், இந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை உரிமையாளர் மற்றும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட அந்த மருத்துவமனையில் மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் அசோக்குமார் ஹண்டோ ஆய்வு செய்தார்.

விசாரணை நடத்தப்பட்ட பிறகே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அசோக்குமார் கூறினார். 10 ஆம் வகுப்பு தாண்டாத ஒருவர் நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.