Asianet News TamilAsianet News Tamil

நீதி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன்... நீதிமன்றத்தில் கதறிய நிர்பயாவின் தாய்...!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் உள்ளிட்ட 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. 

I have lost hope in justice...Nirbhaya mother
Author
Delhi, First Published Feb 12, 2020, 5:36 PM IST

தண்டனையை தாமதிக்க குற்றவாளிகள் முயல்கின்றனர் என்பதை நீதிமன்றம் ஏன் புரித்துகொள்ளவில்லை, நீதி மீதான நம்பிக்கையை இழக்கிறேன் என நிர்பயாவின் தாய் நீதிமன்றத்தில் கதறியுள்ளார். 

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் உள்ளிட்ட 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. 

I have lost hope in justice...Nirbhaya mother

இந்நிலையில், தண்டனையில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு, மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவதில் குழப்பத்தை ஏற்படுத்தி 2 முறை தள்ளிப்போனது. இந்நிலையில், நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு எதிராக புதிய தூக்கிலிடும் உத்தரவு பிறப்பிக்கக் கோரி அரசு மற்றும் நிர்பயாவின் பெற்றோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்மேந்தர் ராணா, 4 குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கை ஒத்திவைத்தார். 

I have lost hope in justice...Nirbhaya mother

இதனிடையே, நீதிமன்றத்திற்கு வந்த நிர்பயாவின் தாயார் கடந்த 7 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறோம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குங்கள் என கண்ணீர் மல்க கூறியது நாடு முழுதும் பலரையும் உலுக்கியுள்ளது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்பயா தாய்;- நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பதில் தற்போது நம்பிக்கை மற்றும் உறுதியை இழந்து நிற்கிறேன். என் மகளுக்கு நீதி கிடைக்க நான் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த குற்றவாளிகள் தந்திரங்களை பயன்படுத்தி தண்டனையை தாமதப்படுத்தி வருகின்றனர். தண்டனையை தாமதிக்க முயல்கின்றனர் என்பதை நீதிமன்றம் ஏன் புரித்துகொள்ளவில்லை, நீதி மீதான நம்பிக்கையை இழந்து வருகிறோம் என தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios