முதலிரவில் கணவன் செய்த விபரீத முயற்சி.. 7 நாட்களுக்கு பின் மனைவி உயிரிழந்த சோகம்..

தனது முதலிரவில் பாலியல் செயல்திறன் அதிகரிக்கும் மாத்திரைகளை உட்கொண்டு பொறியாளர் கணவர் மனைவி உடன் உடலுறவு கொண்டதால் புதுமணப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

Husbands pill fueled sex on wedding night ends in wife tragic death in uttarpradesh Rya

தனது முதலிரவில் பாலியல் செயல்திறன் அதிகரிக்கும் மாத்திரைகளை உட்கொண்டு பொறியாளர் கணவர் மனைவி உடன் உடலுறவு கொண்டதால் புதுமணப் பெண் ஒருவர் உயிரிழந்தார். உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. திருமண இரவில் பாலுணர்வைக் அதிகரிக்கும் மாத்திரைகளை அவரது கணவர் உட்கொண்டதால் அந்த பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து. கான்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 7-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், பிப்ரவரி 10-ம் தேதி இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகிகள் அறிவித்தனர்.

10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை ஏன் அமல்படுத்தவில்லை; பாஜக கேள்வி!!

இதை தொடர்ந்து அந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்பி) மனு அளித்தனர். கணவன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஊரைவிட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த பெண்ணுக்கு கடந்த 3-ம் தேதி தான் திருமணம் நடந்துள்ளது. அப்பெண்ணின் பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவரது சகோதரன் இந்த திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி அப்பெண் தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் முதலிரவின் போது அந்த பெண்ணின் கணவர், பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்கும் மாத்திரைகளை உட்கொண்டு உடலுறவில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இதில் அந்த பெண்ணுக்கு கடும் காயங்கள் ஏற்பட்டதாகவும், அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவரை பரிசோதித்த பெண் மருத்துவர் அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அளவுக்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை எம்.பி ஆகிறார் சோனியா காந்தி.. இன்று ராஜஸ்தானில் மனு தாக்கல்..

தொடர்ந்து அந்த பெண் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முதலிரவின் போது ஏற்பட்ட காயங்களால் அந்த பெண் உயிரிழந்துள்ளார். அவரது அந்தரங்கப் பகுதியில் ஏற்பட்ட காயங்களால் தொற்று ஏற்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios