இந்தியாவில் ஒருவர் எவ்வளவு நிலம் வாங்கலாம்?

இந்தியாவில் நிலம் வாங்குவது என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. அப்படி, ஒருவர் எவ்வளவு நிலம் வாங்க முடியும் என்பதை இங்கு காணலாம்

How Much Land Can a Person Own in India smp

இந்தியாவில் நிலம் என்பது அதிகாரமாகவே பார்க்கப்படுகிறது. நிலத்துக்கும், தங்கத்துக்கும் இங்கு தனி மதிப்பு உண்டு. வாழ்நாளில் எப்படியாவது நிலம் ஒன்றை வாங்கி விட வேண்டும் என பலரும் முனைப்பு காட்டி வருவதை நாம் பார்த்திருப்போம். நம் நாட்டில் தங்கத்தை போலவே நிலமும் முதலீட்டு பொருளாகவே உள்ளது.

1793 ஆம் ஆண்டு ஜமீன்தாரி முறையிலிருந்து தற்போது வரை இந்தியாவில் நில விதிகள் மாறிவிட்டன. ஆனால் எதிர்கால பாதுகாப்பிற்காக நிலத்தை வைத்திருக்கும் அல்லது சொத்துக்களில் முதலீடு செய்யும் பாரம்பரியம் இன்றுவரை மாறாமல் உள்ளது.

இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் நிலம் வாங்கும் போது வெவ்வேறு நடைமுறைகள் அல்லது சட்டங்களைப் பின்பற்றுகின்றன. உதாரணமாக, சில மாநிலங்களில், ஒரு விவசாயி மட்டுமே விவசாய நிலத்தை வாங்க முடியும், ஆனால் சில மாநிலங்களில், விவசாய நிலத்தை வாங்குவதற்கு அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை.

ஆனால், இந்தியாவில் ஒருவர் எவ்வளவு நிலம் வாங்க முடியும்? எவ்வளவு நிலம் வைத்திருக்க முடியும்? அதற்கு ஏதேனும்  வரம்புகள் உள்ளனவா? என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் இருக்கலாம். ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகு மாநிலங்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டன. அதன்படி, இந்தியாவில் நிலம் வாங்குவது என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. விவசாயம் அல்லாத நிலம் தொடர்பாக அப்படி எந்த விதியும் பெரிதாக இல்லை. ஆனால், விவசாய நிலத்தை யார் வாங்கலாம்? எவ்வளவு வாங்கலாம் என்பதை அரசுகளே முடிவு செய்கின்றன.

அதன்படி, தமிழ்நாட்டில் ஒருவர் அதிகபட்சமாக ஒருவர் 59.95 நிலம் வாங்கலாம். கேரள நிலச் சீர்திருத்தச் சட்டம், 1963இன்படி, திருமணமாகாத தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக 7.5 ஏக்கர் நிலம் வைத்திருக்கலாம். 5 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கூட்டுக் குடும்பம் 15 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க முடியாது.

மகாராஷ்டிராவில், ஏற்கனவே விவசாயத் துறையில் இருப்பவர்கள் மட்டுமே விவசாய நிலத்தை வாங்க முடியும். அம்மாநிலத்தில் நிலம் வைத்திருப்பதற்கான அதிகபட்ச வரம்பு 54 ஏக்கர் ஆகும். மேற்கு வங்க நிலச் சீர்திருத்தச் சட்டத்தின்படி, மாநிலத்தில் 24.5 ஏக்கர் விவசாய நிலத்தை ஒருவர் வைத்திருக்கலாம். அதற்கு மேல் வாங்க முடியாது.

சரணடைய 4 வாரங்கள் அவகாசம் கேட்கும் பில்கிஸ் பானு குற்றவாளி!

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஒருவர் அதிகபட்சமாக 32 ஏக்கர் வாங்கலாம். மகாராஷ்டிராவை  போலவே, கர்நாடகாவிலும் விவசாயத் துறையில் இருப்பவர்கள் மட்டுமே விவசாய நிலத்தை வாங்க முடியும். அல்லது, 25 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள ஒருவர் மட்டுமே கர்நாடக மாநிலத்தில் விவசாய நிலத்தை வாங்க முடியும்.

உத்தரப்பிரதேச மாநில நிலச் சீர்திருத்தச் சட்டம் 1960இன் படி உச்சவரம்பு 12.5 ஏக்கர் ஆகும். பீகாரில் ஒருவர் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத நிலம் உட்பட 15 ஏக்கர் வைத்திருக்கலாம். ஹரியானாவில் விவசாயம் அல்லாத நிலத்தை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios