Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் கொட்டிவரும் கனமழை….நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பர 7 பேர் பரிதாப மரணம்!!

heavy rain and land slide in kerala
heavy rain and land slide in kerala
Author
First Published Jun 15, 2018, 6:56 AM IST


கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்த. 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை  வழக்கத்தைவி முன்னதாகவே தொடங்கியது. இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக கேரள மாநிலம் முழுவதும் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.

heavy rain and land slide in kerala

.இந்த தொடர் மழையால் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி உள்ளிட்ட சில பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்த பல வீடுகள்  மண்ணில் புதைந்தன. ம் வயலில் பயிரிடப்பட்டிருந் பயிர்கள் மழையில் அடித்துச்செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.

நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7  பேர் உயிரிழந்தனர்  மேலும் 9 பேரை காணவில்லை என கூறப்படுகிறது.. இதையடுத்து சிறப்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது.

heavy rain and land slide in kerala

அதன்படி 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 7  பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே மீட்பு பணிகளை விரைந்து செய்யுமாறு அமைச்சர்கள்,, தலைமை செயலாளர், கலெக்டர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு  முதலமைச்சர் பிராயி விஜயன் அறிவுறுத்தினார்.

கனமழை காரணமாக கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. நிலச்சரிவால் கோழிக்கோடு–கொள்ளேகால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பலத்த மழை, நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் தங்க நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios