Asianet News TamilAsianet News Tamil

பான் கார்டு வைத்திருக்கிறீர்களா..? உஷார்... மத்திய அரசு கெடு..!

ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்காவிட்டால் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பான் கார்டு செல்லுபடியாகாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 

Have a PAN Card ..? Central government
Author
India, First Published Jul 11, 2019, 6:30 PM IST

ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்காவிட்டால் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பான் கார்டு செல்லுபடியாகாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 Have a PAN Card ..? Central government

ஆதார் திட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஆதார் எண்ணையும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பயன்படும் நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் எண்ணை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Have a PAN Card ..? Central government

இதுவரை 22 கோடி பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளதாகவும், 18 கோடி பான் எண் இணைக்கவில்லை எனவும் நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, ஆதார் எண்ணை குறிப்பிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என அண்மையில் மத்திய அரசு தன் பட்ஜெட்டில் அறிவித்தது. Have a PAN Card ..? Central government

எனவே, வரும் செப்டம்பர் 1ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காத பான் எண்கள் காலாவதியாகி விடும் எனவும், அதன்பின் புதிதாக விண்ணப்பித்தே பான் எண் பெற வேண்டும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios