பாலியல் பலாத்காரத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குர்மீத் சிங், தனது பெண் சீடர் ஒருவர் எழுதிய மொட்டை கடிதத்தால் சிக்கிக் கொண்டார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

தனது ஆசிரமத்தில் வசித்து வந்த ஏராளமான பெண் சீடர்களுடன் சாமியார் குர்மீத்சிங் காதல் லீலைகள் நடத்தியதும், பெண் சீடர்கள் பலரை பலாத்காரம் செய்ததும் தற்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு பெண் சீடர்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் குர்மீத் சிங் சி.பி.ஐ. நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த பாலியல் பலாத்கார விவகாரத்தை சாமியாரின் பெண் சீடர்களில் பாதிக்கப்பட்ட ஒருவர் எழுதிய மொட்டை கடிதம் மூலமே வௌிஉலகிற்கு தெரியவந்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு சாமியாரின் பெண் சீடர்களில் ஒருவர், அந்த கடிதத்தை அப்போது பிரதமராக இருந்த ஏ.பி. வாஜ்பாய்க்கும், பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் முகவரி, பெயர் குறிப்பிடாமல் எழுதினார். இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்தே, சி.பி.ஐ. விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது-

நான் பஞ்சாபை சேர்ந்தவள், சாமியார் குர்மீத் சிங்கின் தீவிரமாக பக்தை. அவரின் பக்தையாக மாறியதால், வீட்டை விட்டு வெளியேறி அவரின் ஆசிரமத்தில் கடந்த 2 ஆண்டுகளாகத் தங்கி இருக்கிறேன். நான் குர்மீத் சிங்கை ‘மகராஜா’ என்றுதான் அழைப்போம். ஆசிரமத்தில் உள்ள பாதாள அறையில், சொகுசு அறையில் சகல வசதிகளுடன் மகராஜா தங்கி இருப்பார். 

ஒருநாள் இரவு 10 மணி இருக்கும், மகராஜா என்னை கூப்பிட்டு அனுப்பினார். நான் அவரின் பாதாள அறைக்கு சென்றேன். அவர் படுக்கையில் அமர்ந்து, தொலைக்காட்சியில், ‘ஆபாச திரைப்படங்களை’ பார்த்துக்கொண்டு இருந்தார். மகராஜாவுக்கு அருகே துப்பாக்கி இருந்தன. இதைப் பார்த்து நான் அதிர்ச்சியானேன். நான் நினைத்திருந்த மகாராஜா முற்றிலும் வேறுபட்டு இருக்கிறாரே என வேதனை அடைந்தேன். அவர் என்னை சிறப்பு உதவியாளராக தேர்வு செய்து இ ருப்பதாகக் கூறி அழைத்தார்.

ஆனால், நான் மகாராஜா அருகே செல்ல மறுத்து ஒதுங்கினேன். ‘ பயப்படாதே, நான் உண்மையில் கடவுள்தான்’,  கடவுள் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார் என்று நான் கூறி விலகினேன்.

அதற்கு அவர் “ இது ஒன்றும் புதிதல்ல,பல ஆண்டுகளாக இப்படித்தான் நடக்கிறது. கடவுள் கிருஷ்ணர் கூட 350 கோபியர்கள் உடன் தினந்தோறும் மகிழ்ச்சியாக இருந்தார். அவரை மக்கள் கடவுளாக வணங்கவில்லை’’

அதன்பின் என்னை மிரட்டியும், என் குடும்பத்தினரையும் என்னையும் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றிவிடுவதாக மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அதுமட்டுமல்லாம் இதேபோல் அடுத்த 3 ஆண்டுகளாக என்னை இதேபோல பலாத்காரம் செய்தார். இதபோல் ஆசிரமத்தில் வசிக்கும் 30 வயது முதல் 40 வயதுவரை உள்ளான பெண்களை மகாராஜா பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண்களுக்கு திருமண வயது கடந்து விட்டதால், அவர்களை வலுக்கட்டாயமாக தனது இச்சைக்கு மகராஜா பயன்படுத்திக்கொண்டார்.

மகராஜாவின் இந்த செயலுக்கு இணங்க மறுத்த பெண் சீடர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டனர். இதனால், அங்குள்ள பெண் சீடர்கள் ஏராளமானோர் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வௌியே சொல்ல முடியாமல் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஆசிரமத்தில் உள்ள அனைத்து பெண் சீடர்களுக்கும் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட வேண்டும். அப்போது நாங்கள் கன்னித்தன்மையுடன் இருக்கிறோமோ என்று எங்கள் பெற்றோருக்கு தெரியவரும், எங்கள் வாழ்க்ைக அழிந்துவிட்டது என்று புரியும். மருத்துவச் சோதனை மூலமே, எங்கள் வாழ்க்கையை மகராஜாகுர்மீத் ராம் ரஹீம் சிங் அழித்தது உண்மை என நிருபிக்க முடியும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த கடிதத்தைப் பெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல், தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 3-ந்தேதி உத்தரவிட்டார். முதல்கட்டமாக சிர்சா மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

அந்த அறிக்கையில், பெண் சீடர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான முகாந்திரம் இருப்பது உண்மை என அறிக்கையில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி, சி.பி.ஐ. விசாரணைக்கு செப்டம்பர் 24-ந்தேதி உத்தரவிட்டார்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில், சாமியார் குர்மீத் சிங் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.