சாமியார் ராம் ரஹீமுக்கு நேரம் சரியில்லை...அடுத்தடுத்து மாதம் வருகிறது ‘பெரிய ஆப்பு’…

பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறையும், ரூ.30 லட்சம் அபராதமும விதிக்கப்பட்டு சிறையில் உள்ள 50 வயது சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்க்கு அடுத்த மாதம் மிகப்பெரிய சிக்கல் ஒன்று காத்து இருக்கிறது.

அக்டோபர் மாதம் சாமியார் குர்மீத் சிங் தொடர்புடைய இரு கொலை வழக்குகளின் விசாரணை முடிய உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு அவருக்கு எதிராக  வரும் பட்சத்தில் அவரின் எதிர்காலம், வாழ்நாள்அனைத்தும் சிறையிலேயே கழிக்க வேண்டியது இருக்கும்.

2002ம் ஆண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தை சத்தர்பதி என்ற பத்திரிகையாளர் வௌிப்படுத்தினார். ஆனால், அவரை சாமியாரின் தேரா சச்சா சவுதா அமைப்பினர் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பான வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

மேலும், தேரா சச்சா சவுதா அமைப்பில் பணியாற்றிய மேலாளர் ரஞ்சித் சிங் கடந் 2002ம் ஆண்டு மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். அதில் சாமியார் குர்மீத் சிங் மீதும் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கின் இறுதி விசாரணையும் அடுத்த மாதத்தில் முடிய உள்ளது. ஆக இரு கொலை வழக்குகளின் விசாரணையும் அடுத்த மாதத்தில் முடிந்து தீர்ப்பு அளிக்கப்படும் நிலையில் சாமியார் ராம் ரஹீமின் எதிர்காலம் தெரியவரும். 

இது போக,  கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ஆதரவாளர்கள் 400 பேருக்கு தேரா அலுவலகத்தில் வைத்து ஆண்மை நீக்கம் செய்தது தொடர்பான வழக்கு, மேலும்,  சீக்கியர்களின் குருவான குருகோவிந்த் சிங் போன்று உடை அணிந்து அவர்களை அவமானப்படுத்தியதாக 
2007ம் ஆண்டு குர்மீத்சிங் மீது சீக்கியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையும் நிலுவையில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.