கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்க  புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது .  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது .  இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ளவர்களை  வீடுகளிலேயே தனிமைப்பட்டிருக்கும்படி  மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது .  ஆனால் அவர்கள் அவற்றையெல்லாம் மீறி சகஜமாக வெளியில் சுற்றும் நிலை இருந்து வருகிறது.  இதனால் வைரஸ் அவர்கள் மூலமாக இன்னும் பலருக்கு பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.  

இதனால்  அவர்களை கண்காணிக்கும் வகையில் , அதாவது அவர்கள்  விதிமுறைகளை பின்பற்றி வீட்டில் இருக்கிறார்களா அல்லது கட்டுப்பாடுகளை மீறுகிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது ,  குறிப்பாக ஆஸ்திரேலியா ,  தென் கொரியா ,  ஹாங்காங் ,  உள்ளிட்ட நாடுகளில் புதிய தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கப்படுகின்றனர். குறிப்பாக  கைகடிகாரம், மின்னணு தகடுகள் மற்றும் QRபட்டைகள் மூலம் , தொழில்நுட்ப கருவிகளின் மூலம் அவர்களை கண்காணித்து வருகின்றனர் .  அந்த வகையில் இந்தியாவிலும்  மின்னணு  மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் நிதி ஆயோக் திட்டத்தின் மூலம் அவர்களை  கண்காணிக்கும் செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது . 

 

தற்போது இந்த தொழில்நுட்பம் சோதனை முறையில் இருந்து வருவதாகவும்,  விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் இது வழங்கப்பட உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .  தற்போது பீட்டா சோதனை செய்யப்பட்டு விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் இன்னும்  ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அது பயன்பாட்டிற்கு வரும்  எனவும் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.  இது அனைத்து இந்திய மொழிகளிலும் பயன்படுத்தும் வகையில்  தயாரிக்கப்பட்டுள்ளது.  ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தில்  கொரோனா கவாச் பெயரிடப்பட்டுள்ளது.  இது முழுக்க முழுக்க கொரோனா வைரசால் தனிமைபடுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.