இந்தியாவில் மோகம் குறைந்துவிட்டதா….தொடர்ந்து 5-வது மாதமாக தங்கம் இறக்குமதியில் சரிவு ....
2019 டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் ரூ.17 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதியாகி உள்ளது. அதேசமயம் 2018 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது தங்கம் இறக்குமதி 4 சதவீதம் குறைந்துள்ளது.
நம் நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து 5வது மாதமாக கடந்த டிசம்பரில் சரிவு கண்டுள்ளது. அந்த மாதத்தில் ரூ.1.94 லட்சம கோடிக்கு இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சரக்குகள் ஏற்றுமதியாகி உள்ளது.
இருப்பினும் 2018 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி 1.8 சதவீதம் குறைந்துள்ளது. பிளாஸ்டிக், நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள், தோல்பொருட்கள் மற்றும் கெமிக்கல்ஸ் பிரிவுகளில் ஏற்றுமதி குறைந்ததே ஒட்டு மொத்த ஏற்றுமதிக்கு சரிவுக்கு காரணம்.
அதேசமயம் தொடர்ந்து 7வது மாதமாக கடந்த டிசம்பரில் நம் நாட்டின் சரக்குகள் இறக்குமதி சரிவுகண்டுள்ளது. அந்த மாதத்தில் சரக்குகள் இறக்குமதி 8.83 சதவீதம் சரிந்து ரூ.2.74 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
இதில் தங்கம் மட்டும் சுமார் ரூ.17 ஆயிரம் கோடிக்கு இறக்குமதியாயுள்ளது. தங்கம் இறக்குமதி 2018 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 4 சதவீதம் குறைந்துள்ளது.
இதனையடுத்து சரக்குகள் பிரிவில் கடந்த டிசம்பரில் ரூ.80 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதாவது ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளது. ஏற்றுமதியாளர்கள் தங்களது வர்த்தகத்தை அதிகரிக்க அமெரிக்கா உள்ளிட்ட பாரம்பரிய சந்தைகளோடு புதிய சந்தைகளைிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.