சிறுமி ஆசிஃபா வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது நடிகர் சதீஷ், அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் சமூகத்துக்கு பயப்படாதது சாவுக்குத்தான் பயப்படும் என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் ஆசிஃபா சிறுமி 8 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும்
இந்த கொலை சம்பவமும், அந்த சிறுமி வன்புணர்வு பற்றி தற்போது குற்றப்பத்திரிக்கையில், இந்த கோர சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முன்னாள் அரசு அதிகாரி சாஞ்சி ராம் பெயர் இடம்பெற்றுள்ளது. அதேபோல வழக்கில் இரண்டு சிறுவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறார்கள்.‘

ஆசிஃபா தினமும் காட்டுப்பகுதியில் குதிரை மேய்ப்பதை பலமுறை சாஞ்சி ராமும் அவரது மகன் விஷால், அவனின் நண்பன் பர்வேஷ் ஆகியோர் நோட்டமிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அந்த சிறுமியை பின்தொடர்ந்து கடத்தி இருக்கிறார்கள். முதலில் குஜ்ஜார் இன மக்களை
பயமுறுத்தி இப்படி செய்துள்ளனர். கடைசியில் அந்த சிறுவர்களின் விருப்பப்படி பலாத்காரம் செய்துள்ளனர். கோயிலுக்குள் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல், விசாரணை நடத்த சென்ற காவல் துறை அதிகாரி உட்பட 8 பேர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து தொடர்நது 3 நாட்கள் வன்புணர்வு செய்துள்ளனர். பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி ஆசிஃபா கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கோர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளியே வந்த இந்த சம்பவம் நாடு முழுவதும பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி உள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு, டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சதீஷ், இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில், கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், சிறுமியைக் கற்பழித்துக் கொன்றவர்களைப் பிடிக்காமல் விடமாட்டோம்... ஆமா பிடிச்சுட்டு விட்ருவீங்க... அவன் மூணு மாசத்துல வெளியே வந்து அதையே திரும்ப பண்ணுவான். புடிச்சி தூக்குல போடுங்க சார் இவனுங்கள... சமூகத்துக்கு பயப்படாதது சாவுக்குத்தான் பயப்படும் என்று சதீஷ் கடுமையாக விமர்சித்துளளார். சதீஷின் கருத்தை பலரும் ஆமோதித்து வருகின்றனர்.