புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் அதீத கவர்ச்சி உடையணிந்து பங்கேற்றதால், பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை ஹினா கான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.    ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் யே ரிஸ்தா கியா கெலதா ஹை என்ற பெயரில் ஒளிபரப்பாகும் இந்தி சீரியலில் நடித்து வருபவர் ஹினா கான். 

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி நடிகையாக இவர் விளங்குகிறார். இந்த நிலையில் ஹினா கான் டெல்லியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.   நல்ல விஷயம் தானே, ஒரு நடிகை இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதலாக இருக்கும். ஆனால் பங்கேற்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹின வெளியிட்ட பிறகு தான் சர்ச்சை வெடித்துள்ளது.   

நீலநிற ஜீன்சும், மார்பகங்கள் தெரியும் வெள்ளைச் சட்டையும் அணிந்தபடி, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார். உள்ளாடை அணியாமல் டிரான்ஸ்பரன்டான வெள்ளை உடையுடன் ஹினா கான் வந்தது கேமரா மேன்களுக்கு விருந்தாக அமைந்து போனது. கேமரா மேன்கள் மாறி மாறி ஹினா கானை போட்டோ எடுத்து தள்ளிவிட்டனர்.   ஆனால் இந்த போட்டோக்களை பார்த்து இதைபார்த்து கொதித்துப் போன நெட்டிசன்கள், நடிகை ஹினா கானை காய்ச்சி எடுக்கத் தொடங்கிவிட்டனர்.
  குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு நடிகை திரைப்படத்தில், சீரியலில் எந்த உடை வேண்டுமானாலும் போட்டு நடித்துக் கொள்ளலாம். ஆனால் இதுபோன்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் ஆபாசமாக உடையணிந்து  பங்கேற்பது சரியா? என்ற ரீதியில் பலர் கேள்வி எழுப்பி இருந்ததால், நடிகை ஹினா கான் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.