உத்தரபிரதேச மாநிலத்தில்  தனது 35 வயது மகளை ரூமுக்குள் 18 மணி நேரம் அடைத்து வைத்து கற்பழித்த தந்தை, அந்த அப்பாவி மகளை தனது நண்பர்கள் இருவருக்கும் விருந்தாக்கியுள்ளார். இது தொடர்பாக மகள் அளித்த புகாரை அடுத்து தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்தவர் ரஜேஷ்சிங். விவசாயியான இவரின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தனது ஒரே மகளான காஜலுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். காஜலுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  காஜல் தனது மகனை அழைத்துக் கொண்டு தந்தை விட்டுக்கு வந்துவிட்டார். சில ஆண்டுகளாகவே காஜல் தந்தை வீட்டில்தான் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி கமால்பூரில் நடைபெற்ற திருமண  நிகழ்ச்சிக்கு ரஜேஸ்சிங் தனது மகள் காஜல் மற்றும் பேரனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.  கமால்பூர் லக்னோவிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது, அங்கு ரஜேஸ்சிங்  தன் நண்பர்கள்  மான்சிங் மற்றும் கரண்சிங்  ஆகியோரையும் தங்களுடன் இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைய தினம் ரஜேஸ்சிங் கனது மகள் என்றும் பாராமல் காஜலை ஒரு ரூமுக்குள் 18 மணி நேரம் அடைத்து வைத்துள்ளார். முதலில் தந்தை ரஜேஸ்சிங் தனது மகளை கொடூரமாக கற்பழித்துள்ளார்.

பின்னர் தனது நண்பர்கள் மான்சிங் மற்றும் கரண்சிங் ஆகியோரையும் மகள் இருந்த ரூமுக்குள் அனுப்பி உறவு கொள்ள வைத்தார். இநத் கொடூர சம்பவத்தால் நிலைகுலைந்து போன காஜல், அங்கிருந்து தப்பி அருகில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

இதையடுத்து சீதாபூர் போலீஸ் பாலியல் பலாத்கார புகார் தொடர்பாக தந்தை மற்றும் அவரது 2 நண்பர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. அதில் ரஜேஸ்சிங்கின் நணப்ர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவான தந்தை மற்றும் இன்னொரு நண்பர் ஆகியோரை போலீசாரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். ஏற்கெனவே கிராமப் பஞ்சாயத்தாரிடம் கள்ள உறவுக்காகச் சிக்கிய தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.