போட்டி பொறாமை காரணமாக கேரளாவை சேர்ந்த பிரபல ஆர்.ஜே மார்ச் மாதம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. 

ஆர்.ஜே.ரமேஷ்:

கேரளாவை சேர்ந்த ஆர்.ஜே ரமேஷ், பல வருடங்களாக பிரபல தனியார் எப்.எம்யில் வேலை செய்து வந்தார். பின் அதில் இருந்து விலகி. தனியாக ஸ்டூடியோ அமைத்து நிர்வாகம் நடத்தி வந்துள்ளார். மேலும் ஏற்கனவே இவர் பிரபலமான ஆர்.ஜே என்பதால் வெளிநாடுகளுக்கும் சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இவரை திருவனந்தபுரத்தில் இவர் நடத்தி வரும் ஸ்டுடியோவில் வைத்து மர்ம கும்பல் ஒன்று நள்ளிரவில் இவரை போட்டி பொறாமை காரணமாக குத்தி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் 4 குற்றவாளிகள் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் அதில் சலிஹ் என்பவர் துபாயில் தலைமறைவாகை உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

உடனடியாக கேரள போலீசார் துபாய் போலிஸின் உதவியுடன்  அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டாம் குற்றவாளியாக அப்துல் சதார் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே ஆயுதம் சப்ளை செய்ததற்காக கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசார் விசாரணை  ரமேஷ் மீது வந்த போட்டி பொறாமை காரணமாக கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.