என்ஜினியரிங் கல்லூரி மாணவிக்கு மது ஊற்றி கொடுத்து, கதற கதற கற்பழித்து அதை வீடியோ எடுத்துவைத்து, 10 லட்சம் ’ரூபாய் கேட்டு மிரட்டிய சீனியர் மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் அகிரிப்பள்ளியில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவர் தனது பிறந்த நாளை நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கொண்டாடி உள்ளார். இந்த பிறந்தநாள் பார்ட்டி, கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது. பார்ட்டியில் அந்த மாணவருடன் படிக்கும் மாணவ, மாணவிகள், சீனியர் மாணவ, மாணவிகள் என பலர் பங்கேற்றுள்ளனர்.

பார்ட்டியில் 22 வயதே ஆன கிராமப்புறப்பகுதியில் இருந்து வந்துள்ள மாணவி ஒருவரும் பங்கேற்றுள்ளார். அவர் மது விருந்து நடைபெற்ற இடத்தில் சுற்றி சுற்றி வந்த நிலையில், அங்கிருந்த   சீனியர் மாணவர்கள் சிவா ரெட்டி, கிருஷ்ண வம்சி ஆகியோர், மாணவியை மது அருந்துமாறு கூறியுள்ளனர். ஆனால் தனக்கு பழக்கம் இல்லை என்று அந்த மாணவி கூறியுள்ளார். பின்னர் சீனியர் மாணவர்கள் அவரை கன்வின்ஸ் செய்து மது அருந்த வைத்துள்ளனர்.

போதையில் இருந்த மாணவியை மாணவர்கள் இரண்டு பேரும் ஹோட்டல் ரூமுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். மேலும்  அதை வீடியோவாக எடுத்துவைத்த இருவரும் சமூகவலைதளங்களில் வெளியிடப்போவதாக கூறி பலமுறை மாணவியை மிரட்டி, மீண்டும் மீண்டும் உடலுறவுக்கு அழைத்துள்ளனர்.   இதனால் செய்வதறியாது தவித்த மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். காவல்துறையில் புகார் அளித்தால் கல்லூரி பெயர் கெட்டுவிடும் என்று நிர்வாகிகள் நினைத்துள்ளனர்.

எனவே சீனியர் மாணவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்த கல்லூரி நிர்வாகம், அந்த வீடியோவை அழிக்கச் செய்ததுடன், மாணவியிடம் மன்னிப்பு கேட்கக் கூறியுள்ளனர். இத்துடன் இந்த விவகாரத்தை மறந்துவிட வேண்டும் என்று மாணவர்களுடன் கூறி அனுப்பி வைத்துள்ளனர். இந்த பிரச்சனைகள் ஓய்ந்துவிட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். ஆனால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவியை தொடர்பு கொண்ட மற்றொரு சீனியர் மாணவரான பிரவீன்,  போதையில் உல்லாசமாக இருந்த வீடியோ தன்னிடமும் இருப்பதாக கூறியுள்ளார்.

தம்முடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் மேலும் தனக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும். இல்லை என்றால் வீடியோவை உனது பெற்றோருக்கு அனுப்பி வைப்பேன் என்று பிரவீன் மாணவியை மிரட்டியுள்ளான்.  இதையடுத்து, மாணவி தனக்கு நேர்ந்ததை தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், 3 மாணவர்களையும் கைது செய்த போலீசார், மாணவியை மிரட்டியது குறித்து விசாரித்து வருகின்றனர்.