இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை சாந்தாகுருஸ் பகுதியைச் சேர்ந்தவர் சஹானா ஸ்னேஹா இவர் விவாகரத்து பெற்றுள்ள இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் சில வருடங்களுக்கு முன்  வேலைக்காக துபாய் சென்றார். அங்கு சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுரேஷும் மும்பையை சேர்ந்தவர். இவர்கள் நண்பர்களாக தொடர்ந்து பழகி வந்தனர்.இந்நிலையில், சஹானா ஸ்னேஹா மீது காமப் பார்வை இருந்ததால், சுரேஷின் அறைக்கு ஒரு நாள் சென்ற சஹானா ஸ்னேஹாவை, அவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதை வீடியோவும் எடுத்துள்ளார். இதனையடுத்து சில நாட்களில் மும்பை வந்து விட்டார் சஹானா ஸ்னேஹா.

மும்பை வந்த சுரேஷ், தன்னிடம் அந்த வீடியோ இருப்பதாகவும் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று கூறி பலமுறை பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சஹானா ஸ்னேஹாவிடம் மிரட்டி 6 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தையும் வாங்கியுள்ளார். சுரேஷின் மிரட்டல் தொடர்ந்ததால் ஒரு கட்டத்தில் முடியாமல் சாந்தாகுரூஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் சுமதி.

இதனையடுத்து, சஹானா ஸ்னேஹா கொடுத்த புகாரை வைத்து வழக்கு பதிவு செய்து ‘குற்றவாளியை தேடி வருகிறார்களாம். சுமதி சொல்லும் வீடியோ இன்னும் போலீசாரின் கைக்கு கிடைக்கவில்லை. கிடைத்த பின்பே அது போலியானதா, உண்மையானதா என்பது தெரிய வரும்’ என்று போலீசார்  வருகின்றனர்.