உஷார்...! மாயமாகும் ரூ.2000 நோட்டுக்கள்...! ஏடிஎம் - ல கூட பணத்தை எடுக்க  முடியாத  நிலை..!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில்,பண தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.இது குறித்து  மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்தார்.

அப்போது, "சில பகுதிகளில் மட்டும் தேவையின் காரணமாக அதிக அளவில் பணத்தை  எடுக்கப்படுவதால்,தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது என விளக்கம் அளித்தார்

குறிப்பாக மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா,உத்திர பிரதேசம்,ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான்,தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஏடிஎம் களில்,கடந்த இரண்டு நாட்களாக பணம் கிடைக்காமல் மக்கள்  பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால் ஏடிஎம் கள் மூடப்பட்டு உள்ளன.பாட்னாவில் கடந்த  மூன்று நாட்களாகவே பணம் கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து  வருகின்றனர்

மேலும், நீண்ட வரிசையில் நின்று,பல மணி  நேரம் காத்திருந்து  பணத்தை எடுத்தாலும் 10  ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுக்க முடிவதில்லை என  மக்கள்   கருத்து தெரிவித்து உள்ளனர்

போபாலில் கடந்த 15 நாட்களாக பணம் கிடைப்பதில்லை .

மேலும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள நிதித்துறை அமைச்சர்  எஸ்பி சுக்லா, "

ஒரு சில மாநிலங்களில் அதிக பணமும் சில மாநிலகளில் குறைவான பணமும் உள்ளது  என  உள்ளது என்கிறார்.

மேலும், பணம் உள்ள மாநிலத்தில் இருந்து பண பற்றாக்குறை உள்ள மாநிலத்திற்கு பணத்தை மாற்ற இதற்கான தனி கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

ஆர்பி ஐ கூட இதற்காக தனி கமிட்டி அமைத்துள்ளது.மேலும் இதற்காக தீர்வு அடுத்த  மூன்று நாட்களில்  செய்து தர முடியும் என  தெரிவித்து உள்ளார்.

 மத்திய பிரதேச முதல்வர்  சிவராஜ் சிங் சவுகான் கூறும் போது...

புழக்கத்தில் உள்ள ரூ. 2000  தாள்கள் திடீரென  காணாமல் போகிறது.பண  மதிப்பிழப்பிற்கு  முன் ரூ.15 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது.பண மதிப்பிழப்பிறகு பின் ரூ.16  லட்சத்து  50000  ஆயிரம்  கோடி  அதிகரித்து  உள்ளது.

ஆனால் தற்போது, ரூ.2000 நோட்டு மட்டும் தற்போது  மாயாமகி  வருகிறது  என  தெரிவித்து  உள்ளார்.