பிரியங்கா காந்தின்ன என்ன ?  அவரையும்  விட்டு வைக்காத டெங்கு  காய்ச்சல் ….

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு பிரியங்கா காந்தியும் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் மலேரியா, சிக்கன் குன்யா மற்றும் டெங்கு ஆகிய தொற்றுநோய்கள் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 150-க்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மட்டும்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  657 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல், கடந்த 19-ம் தேதி நிலவரப்படி டெல்லியில் உள்ள 412 பேர் மலேரியா நோயாலும், 311 பேர் சிக்குன் குனியா நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, காய்ச்சலுடன் கடந்த 23-ம் தேதி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியுள்ளதற்கான அறிகுறிகள் உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளதாகவும், இந்நோய்க்காக சிகிச்சை பெற்றுவரும் பிரியங்காவின் உடல்நிலை தேறிவருவதாகவும் சர் கங்கா ராம் மருத்துவமனையின்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.