டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனை திடீர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

டெல்லியில் பாவனா பகுதியை சேர்ந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது 45 வயது மதிக்கத்தக்க முதியவர் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட குழந்தை மகரிஷி வால்மீகி மருத்துவமனையில் அனுமதிக்க சென்ற போது சிறுமிக்கு மருத்தவமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் மருத்துவமனையின் நேரம் முடிந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உறவினர்களை சமானதப்படுத்தினர். அதேபோல் சிறுமியை பலாத்காரம் செய்த நபரையும் கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.