மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் சாகர் காலே . இவர் பணி நிமித்தம் காரணமாக அடிக்கடி மும்பைக்கு ரயில் மூலம் பயணம் செய்வார்  . அப்படி பயணம் செய்யும் போது ரயிலில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கமாம் .

கடந்த ஜூலை 19 ம் தேதி மும்பையில் இருந்து புனேவிற்கு டெக்கான் குயின் ரயிலில் பயணம் செய்துள்ளார் . அப்போது சாப்பிடுவதற்காக ஆம்லேட் ஒன்று ஆர்டர் செய்துள்ளார் . டெலிவெரி செய்யப்பட்ட ஆம்லெட்டை சாப்பிடுவதற்காக திறந்தவர்க்கு அதிர்ச்சி காத்திருந்தது . ஆம்லேட்டின் உள்பகுதியில் புழுக்கள் இறந்து கிடந்துள்ளது . அதை பார்த்து அதிர்ச்சியடைந்த காலே ரயில்வே அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார் . உடனே வேறு உணவு தயார் செய்யப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது .

இந்த நிலையில் ஒரு மாதம் கழித்து தற்போது ரயில்வே நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்து இருக்கிறார் . புகாரை பெற்றுக் கொண்ட ரயில்வே கேட்டரிங் துறை அதை ஐஆர்சிடிசி யின் தலைமையத்துக்கு அனுப்பியிருக்கிறது . இது சம்பந்தமாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது .