மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 மாத கர்ப்பிணி சிகிச்சை பனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 198 நாடுகளுக்குமேல் பரவி, உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்த போதிலும் கொரோனா தொற்று நாளுக்குநாள் வேகம் எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4281-ஐ தாண்டியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 114ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக  மகாராஷ்டிராவில் 748 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், 9 மாத நிறைமாத கர்ப்பணி கொரோனா அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தனிவார்ட்டில் மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி 9 மாதம் நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.