ராஜஸ்தானில் இளம் ஜோடிகளை நிர்வாணமாக்கி ஊர்வலமாக நடக்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதை வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் பகுதியில் இளம் ஜோடியை நிர்வாணப்படுத்தி அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்  ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து 20 வயதான அந்த பெண் முதலில் தரு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்துவேறுபாடு காரணமா பிரிந்துவிட்டனர். பின்னர் மங்கிலால் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார். உதய்பூர் பகுதியில் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். மேலும், கேமடி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இதையடுத்து அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில் பெண்ணின் வீட்டிற்கு சென்று  முதல் கணவர் மற்றும் அவரது நண்பர்களுடன்  மிரட்டியுள்ளார். பிறகு நிர்வாணப்படுத்தியுள்ளனர். மேலும், அவர்களை ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றுள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.