Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் 1200ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு.. இரட்டை சதமடித்த மகாராஷ்டிரா, கேரளா.. மாநில வாரியாக முழு விவரம்

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களும் இரட்டை சதமடித்துவிட்டன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1192ஆக உயர்ந்துள்ளது. 
 

corona cases full list in india by state wise
Author
India, First Published Mar 30, 2020, 3:32 PM IST

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா இந்தியாவில் சமூக தொற்றாக பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் சமூக விலகலை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு உறுதியானவர்களுக்கு, மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகளை அமைத்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க நடவடிக்கைகளை முடுக்கிவிட்டாலும், தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கொரோனா பாதிப்பு 200ஐ கடந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதிப்பு 67ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona cases full list in india by state wise

மொத்தமாக இந்தியாவில் 1192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. மாநில வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை பார்ப்போம். 

மாநில வாரியாக கொரோனா பாதிப்பின் முழு விவரம்:

மகாராஷ்டிரா - 215 

கேரளா - 201

கர்நாடகா - 83

தமிழ்நாடு- 67

ராஜஸ்தான்  - 60

குஜராத் - 69

உத்தர பிரதேசம் - 75

ஜம்மு காஷ்மீர் - 39

தெலுங்கானா - 69

லடாக் - 13

ஹரியானா- 33

ஆந்திரா - 23

மத்திய பிரதேசம் - 47

மேற்கு வங்கம் - 22

பீகார் - 15

கோவா - 6

புதுச்சேரி, மணிப்பூர், மிசோரம் - 1.
 

Follow Us:
Download App:
  • android
  • ios