9 வயது சிறுமியை 8 நாட்களாக அடைக்கப்பட்டு தொடர்ந்து  பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பேஸ்தான் பகுதியில் அடையாளம் தெரியாத சிறுமியின் சடலம் கிடந்ததை அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் பார்த்துவிட்டு போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுமார் 5 மணி நேரம் நடந்த பிரேத பரிசோதனைக்கு பின் அந்த சிறுமி 8 நாட்களாக துன்புறுத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது உடலில் 80-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் இருந்துள்ளது
மேலும், அந்த சிறுமியின் அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 நாட்கள் ஒரே இடத்தில் வைத்து துன்புறுத்தப்பட்ட அந்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மரக் கட்டைகளால் அடித்து சிறுமியின் அந்தரங்க உறுப்பில் தாக்கியிருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் அனைத்து ஒன்று முதல் 7 நாட்களுக்கு முன்னதாக நடந்தவை என்று அறிக்கையில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், காலையில் நடைப்பயிற்சிக்கு சென்ற பொதுமக்கள் சிறுமி உடல் கிடப்பதை தகவல் கொடுத்தனர், ஆனால்  அந்த சிறுமி யாரென்ற அடையாளம் தெரியவில்லை என்றார்.

இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி கொடூரமாக கழ்ற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஒன்பது வயது சிறுமி அதேபோல கொடூரமாக கற்பழித்து கொன்ற இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.