கல்லூரி மாணவிகளுக்கு பண ஆசை காட்டி, ஆன்லைன் மூலம் விபச்சாரம் செய்து வந்த கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆடம்பர வாழ்க்கையை விருப்பும் கல்லூரி மாணவிகள் தான் இந்த கும்பலின் முதல் டார்கெட். அவர்கள் மூலம் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவிகளையும், பாக்கெட் மணி தேவைக்காக சிறு சிறு வேலைகள் செய்து வரும் மாணவிகளையும், 1 மணி நேர வேலை என ஆசை காட்டி தங்களுடைய வலையில் வீழ்த்தி அவர்களை விபச்சார தொழிலில் ஈடுபடுத்துவதை, இந்த ஆன்லைன் கும்பல் தங்களுடைய வேலையாக செய்துவருகிறது.

இதற்கான இவர்கள் இணையதளம் ஒன்றை துவங்கி அதன் மூலம் பல கல்லூரி மாணவிகளை சீரழித்து வருவதாக, மும்பை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேரடியாக இதுகுறித்து விசாரணை செய்யாமல், பல நாட்களாக மறைமுகமாக இந்த இணையதள விபச்சார கும்பலை போலீசார் கண்காணித்து வந்தனர். 

மேலும் இவர்களை பொறி வைத்து பிடிப்பதற்காக, போலீசாரே டம்மியாக இரண்டு நபர்களை வைத்து 'Mumbai Hot collection.com ' என்கிற இணைய தளத்தை தொடர்பு கொள்ள வைத்தனர். போலீசார் எதிர்பார்த்தது போலவே, விபச்சார பின்னணியில் உள்ளவர்களிடம் இருந்து பதில் வந்தது. 

அதவாது, வாடிக்கையாளர்கள் போன் நம்பரை பெற்று கொள்ளும் விபச்சார கும்பல், அவர்களுடைய வாட்ஸ் ஆப்புக்கு மெசேஜ் செய்வார்கள். அதில் தங்களிடம் உள்ள பெண்களின் புகைப்படம் மற்றும் அவர்களுக்கு என்ன தொகை கொடுக்க வேண்டும் என்பது குறித்து முழு விவரத்தையும் தெரிவிப்பார்கள். பின் வாடிக்கையாளர்கள் வர சொல்லும் இடத்திற்கு, அவர்கள் தேர்வு செய்த பெண்ணை புரோக்கர்கள் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

அந்த வகையில், போலீசார் எதிர்பார்த்தது போலவே விபச்சார கும்பலும், பிரபல தனியார் ஹோட்டலுக்கு இரண்டு புரோக்கர்களுடன், இரண்டு பெண்களையும் அனுப்பிவைத்துள்ளார். பின்னர் இவர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் இருவரும் கல்லூரி மாணவிகள் என்றும், பண ஆசை காட்டி இவர்களை விபச்சாரத்தில் தள்ளியது தெரியவந்தது. 

மும்பை மட்டும் இன்றி, இந்த கும்பல் சென்னை, கல்கத்தா, உள்ளிட்ட பல இடங்களிலும்  வெப்சைட் மூலம், விபச்சாரம் செய்து வருவதாவும், தொடர்ந்து இந்த இந்த கும்பலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்ன துருவி துருவி விசாரணை செய்து வருகிறார்கள். இவர்களிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.