Asianet News TamilAsianet News Tamil

மத்திய அமைச்சர் கன்னத்தில் பளார்... வைரலாகும் வீடியோ...!

மும்பையில் மத்திய அமைச்சரை மர்ம நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ரா மாநிலத்தில் தானே அடுத்துள்ள அம்பர்நாத் எனுமிடத்தில் நடைபெற்ற விழாவுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சனிக்கிழமை கலந்துகொண்டார்.

மும்பையில் மத்திய அமைச்சரை மர்ம நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ரா மாநிலத்தில் தானே அடுத்துள்ள அம்பர்நாத் எனுமிடத்தில் நடைபெற்ற விழாவுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சனிக்கிழமை கலந்துகொண்டார். பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிறகு அங்கிருந்த மர்ம நபர் மத்திய அமைச்சர் அத்வாலேவை பலமாக அறைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் அந்த மர்ம ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories