நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் வரவில்லை. ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பண தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த பண தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, புதிய ரூபாய் நோட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்தில் விடப்பட்டது. அந்த காலகட்டத்தில் கடுமையான பண தட்டுப்பாடு நிலவியது. தேசம் முழுவதும் ஏடிஎம் வாசல்களில் மக்கள் அணிவகுத்து பணத்திற்காக காத்திருந்தனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கை சாமானிய மக்களிடையே கடும் அதிருப்தியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. அந்த நடவடிக்கையை ஆரம்பத்தில் ஆதரித்தவர்கள் கூட பிறகு அதை எதிர்த்தனர்.

அதன்பிறகு, புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவிற்கு புழக்கத்திற்கு வந்தவுடன் நிலைமை சீரடைந்தது. இந்நிலையில், தற்போது ஹைதராபாத், சூரத், போபால், டெல்லி ஆகிய நகரங்களில் பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லை. ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் வாயிலாகத்தான் பணத்தட்டுப்பாடு வெளிச்சத்திற்கு வந்தது.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Have reviewed the currency situation in the country.  Over all there is more than adequate currency in circulation and also available with the Banks.  The temporary shortage caused by ‘sudden and unusual increase’ in some areas is being tackled quickly.</p>&mdash; Arun Jaitley (@arunjaitley) <a href="https://twitter.com/arunjaitley/status/986132137840693249?ref_src=twsrc%5Etfw">April 17, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில், இதுதொடர்பாக டுவிட்டரில் விளக்கமளித்துள்ள நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இந்தியாவில் தேவையான அளவு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. வங்கிகளிலும் போதுமான பணம் உள்ளது. ஆனால் நாட்டின் சில பகுதிகளில் திடீரென அதிகளவு பணம் ஏடிஎம்களில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் சில பகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம். இந்த தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு இடையே அதிகமாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க மத்திய அரசு சார்பில், மாநில வாரியாக குழு அமைக்கப்பட்டிருப்பதாக நிதித்துறை இணையமைச்சர் சுக்லா தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரித்து பண தட்டுப்பாட்டை சரிசெய்ய ரிசர்வ் வங்கியும் குழு அமைத்துள்ளது.