கார் விபத்தில், குடும்பத்தினருடன் உயிர் தப்பினார் முன்னாள் முதல்வர்…

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் நேற்று கார் விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக முன்னாள் முதல் அமைச்சர் மதுகோடா தனது குடும்பத்தினருடன் உயிர் தப்பினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் அமைச்சராக கடந்த 2006ல் இருந்து 2008 வரை மதுகோடா பொறுப்பில் இருந்தார். இவர் மீது சுரங்க ஊழல், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

அவர் முதல் அமைச்சராக பொறுப்பில் இருந்தபோது ரூ. 3,400 கோடி அளவுக்கு மோசடி நடந்தாக புகார்கள் உள்ளன. இதுதொடர்பன விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது மனைவி ஜெகன்நாத் பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளனர்.

இந்த நிலையில் மதுகோடா தது மனைவி, மகளுடன் மஜ்காவோன் பகுதியில் கால்பந்தாட்டத்தை காண்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

கால்பந்தாட்ட போட்டியின் சிறப்பு விருந்தினராக அவர் அழைக்கப்பட்டு இருந்தார். மேற்கு சிங்பும் மாவட்டம் சக்ராதர்பூரில் கோடாவின் கார் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயர் ஒன்று வெடித்துச் சிதறியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையை விட்டு அகன்று பள்ளத்திற்குள் சென்று விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கோடாவும், அவரது குடும்பத்தினரும் உயிர் தப்பினர். இதையடுத்து மாற்று காரில் கோடாவும் அவரது குடும்பத்தினரும் கால்பந்தாட்டத்தை காண சென்றனர்.