ஆணாக மாறிய பெண்ணிற்கும், பெண்ணாக மாறிய ஆணிற்கும் திருமணம் நடக்க உள்ளது என்றால்  நம்மால் நம்ப  முடிகிறதா ? ஆம்  உண்மை. கேரளாவை  சேர்ந்த ஆரவ் அப்புகுட்டன் 46  வயதான இவர், பெண்ணாக  இருந்து  ஆணாக  மாறியவர். இதே  போன்று  ஆணாக  இருந்த சுகன்யா கிருஷ்ணன். 22  வயதான்  இவர்   பெண்ணாக  மாறி உள்ளார்.

கேரளாவை சேர்ந்த இவர்கள் இருவரும், கடந்த 3 வருடங்களுக்கு  முன்பு, மும்பையில் உள்ள  மருத்துவமனையில் சந்தித்துள்ளனர். அதாவது இருவரும் மும்பையில் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள வந்திருந்த போது    எதிர்பாராத  விதமாக  இருவரும்  சந்தித்துள்ளனர்.

 சிகிச்சைக்கு  முன்  ஆணாகவும்  பெண்ணாகவும்  நண்பர்களானவர்கள், சிகிச்சைக்கு பின் பெண்ணாகவும்  ஆணாகவும்  மாறி  காதல்  வலையில் விழுந்துள்ளனர்..அதாவது கடந்த 3 வருடங்களில்  நல்ல  நண்பர்களாக  பழகிய  இவர்களுக்கு  இடையில் காதல் மலர்ந்துள்ளது. பின்னர்  இரு  வீட்டாரின்  சம்மதத்தோடு,  விரைவில்  திருமணம்  செய்துக் கொள்ள  முடிவு செய்துள்ளனர்.

 இதில் என்ன சுவாரஸ்யம்  என்றால்,  ஆணாக  மாறிய  பெண்ணுக்கு  வயது 42  மற்றும்  பெண்ணாக  மாறிய  ஆணுக்கு வயது 22 .  இவர்களின்  வயது வித்தியாசமும் இயற்கையாகவே  அமைந்துவிட்டது. இதன்  மூலம்  கணவர் மனைவியை  விட  வயது  பெரியவராக தான்  இருத்தல்  வேண்டும் என்பதற்கு  ஏற்ற  மாதிரியும், அதே வேளையில் வித்தியாசமாக  மலர்ந்த  காதல்  திருமணத்தில்  முடிந்துள்ளது  என்பதையும் உணர்தியுள்ளது.

இவர்கள் இருவரின்  காதல் திருமணம் பற்றிய பேச்சுதான்  தற்போது  வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது