Asianet News TamilAsianet News Tamil

டிக்கெட் எடுக்குறத விட்டுட்டு டிரைவருக்கு குடைப்பிடித்த கண்டக்டர்! ஏன் தெரியுமா?

Bus conductor holds umbrella while driver was driving ksrtc bus during heavy rainfall
Bus conductor holds umbrella while driver was driving ksrtc bus during heavy rainfall
Author
First Published Jun 17, 2018, 1:53 PM IST


பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால், ஓட்டுநருக்கு குடைப்பிடித்து நடத்துனர் உதவி செய்துள்ள வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக
பகிரப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது

இதனைத் தொடர்ந்து காவிரியில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவிரிநீர் தமிழகம் வந்தடைந்துள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆங்காங்கே சாலைகள் பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில், மழையின் காரணமாக பேருந்து ஒழுகியதால், ஓட்டுநருக்கு குடைப்பிடித்தபடி நடத்துனர் இருக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக
வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஹூப்ளியில் இருந்து அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. பேருந்து புறப்பட்ட நேரத்தில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம்
பெருக்கெடுத்து ஓடின. அப்போது கர்நாடக அரசு பேருந்து ஒன்றில் மழைநீர் ஒழுக ஆரம்பித்தது.

இதனால், பயணிகள் அவதிக்கு ஆளானார்கள். ஓட்டுநர் அமர்ந்திருந்த இடத்திலும் மழைநீர் ஒழுக ஆரம்பித்தது. இதனால் பேருந்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓட்டுநருக்கு பாதுகாப்பாக நடத்துனர் குடைப்பிடித்தார். இதனைத் தொடர்ந்து பேருந்து இயக்கப்பட்டது. 

ஓட்டுநருக்கு குடைப்பிடித்த காட்சியை பயணி ஒருவர் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். வைரலாகியுள்ள அந்த வீடியோவை
பார்த்தவர்கள் சிலர், பேருந்தின் அவலநிலை குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios