Live Update: பீகார் சட்டமன்ற தேர்தல் 2020 முடிவுகள்

bihar assembly election 2020 results live

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்றன. அதன் லைவ் அப்டேட்..

8:00 AM IST

பீகார் சட்டப்பேரவை தேர்தல்... 243 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிப்பு

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 125 (பா.ஜ.க. -74, ஜே.டி.யு. -43, வி.ஐ.பி. - 4, ஹெச்.ஏ.எம். - 4)

மகாகட்பந்தன் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 105 (ஆர்.ஜே.டி. - 75, காங்கிரஸ் -19, இடதுசாரிகள் - 16)

ஏ.ஐ.எம்.ஐ.எம். வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 5

லோக் ஜனசக்தி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை : 1

பி.எஸ்.பி. வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 1

சுயேச்சை வெற்றி பெற்றுள்ள தொகுதி எண்ணிக்கை: 1

7:50 AM IST

பீகார் மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

பீகார் சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்ற பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

7:20 AM IST

பீகாரில் மீண்டும் பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணி ஆட்சி

பீகார் சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்ற பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

7:10 PM IST

பீகாரில் மீண்டும் இழுபறி... பாஜகவுக்கு திடீர் பின்னடைவு... யாருக்கும் பெருபான்மை இல்லை..!

நிமிடத்துக்கு நிமிடம் மாறும் முன்னணி நிலவரங்களால்  பீகார் தேர்தலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 136 தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்த பாஜக கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெருபான்மை கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது. தற்போது நிலவரப்படி ஜேடியு - பாஜக கூட்டணி 119 தொகுதிகளிலும்,  ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி 116 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.முன்னணி நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் மாறும் 20 தொகுதிகளை கைப்பற்றும் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. 

6:50 PM IST

பீகாரில் கெத்து காட்டும் ராஷ்டிரிய ஜனதா தளம்.. தனிப்பெரும் கட்சியாக உருவானது

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், 77 தொகுதிகளில் முன்னிலையுடன் ராஷ்டிரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக நீடிக்கிறது. பாஜக 72 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

6:30 PM IST

பீகார் சட்டப்பேரவை தேர்தல்.. நள்ளிரவுக்கு பிறகே முழுமையான முடிவுகள் தெரியவரும்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் நள்ளிரவுக்கு பிறகே முழுமையான முடிவுகள் தெரிய வரும் என துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தகவல் தெரிவித்துள்ளார்.அங்கீகரிக்கப்பட்ட முடிவுகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

6:25 PM IST

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் திடீர் திருப்பம்... பாஜக காங்கிரஸ் இடையே இழுபறி நீடிப்பு

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையை கைப்பற்றுவதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது. 

6:20 PM IST

20 தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி - ஜே.டி.யு கூட்டணி இடையே கடும் போட்டி

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 20 தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி - ஜே.டி.யு கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், பீகார் அரசியலில் இறுதியில் திடீர் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

6:15 PM IST

ஹசன்பூர் தொகுதி.. லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் வெற்றி

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஹசன்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தேஜ் பிரதாப் யாதவ் 34,888 வாக்குகளும், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் ராஜ்குமார் ராய் 33,091 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

6:05 PM IST

பீகார் சட்டப்பேரவை தேர்தல்... 12 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிப்பு

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக - 5, ஐக்கிய ஜனதா தளம் - 2, ராஷ்டிரிய ஜனதா தளம் - 2 காங்கிரஸ் - 1, விகாஷீல் இன்சான் - 2 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

4:05 PM IST

பீகாரில் நம்முடைய ஆட்சிதான் அமையும்.. பூத்தில் இருந்து வேட்பாளர்கள் வெளியேற வேண்டாம்.. ஆர்ஜேடி கட்சி வேண்டுகோள்

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நமக்கு சாதகமான தகவல்கள் வருகிறது. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு தாண்டி நடக்குமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகையால், எவ்வளவு தாமதமானாலும் பூத்தில் இருந்து வேட்பாளர்கள் வெளியேற வேண்டாம். பீகாரில் நம்முடைய ஆட்சிதான் அமையும் என ராஷ்டிரிய ஜனதா தளம் ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளது.

4:00 PM IST

தர்பங்கா தொகுதி... ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் லலித் யாதவ் வெற்றி

தர்பங்கா தொகுதியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் லலித் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். 2,141 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.

3:55 PM IST

சுபால் தொகுதி... ஜேடியு வேட்பளார் பிஜேந்திர பிரசாத் யாதவ் 8வது முறையாக வெற்றி

சுபால் தொகுதியில் ஜேடியு வேட்பளார் பிஜேந்திர பிரசாத் யாதவ் 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 1990ல் இருந்து ஒருபோதும் சுபால் தொகுதியில் பிஜேந்திர பிரசாத் தோற்றது இல்லை. சுபால் தொகுதியில் ஜேடியு வேட்பாளர் பிஜேந்திர பிரசாத் 8வது முறையாக வென்றுள்ளார்.

3:50 PM IST

கஸ்பா தொகுதி... 5 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் முன்னிலை..!

பீகார் சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகளில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. கஸ்பா, தராரி, அலி நகர், சீதாமரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் வேட்பாளர்கள் 100 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். கஸ்பா தொகுதியில் 5 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் முன்னிலையில் இருந்து வருகிறார்.

3:40 PM IST

பீகாரில் 3 மணிவரை 32 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 3 மணிவரை 32 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. பீகாரில் மொத்தம் பதிவான சுமார் 4 கோடி வாக்குகளில் ஒரு கோடியே 28 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இன்னும் 2 கோடி 72 லட்சம் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. தற்போது நிலவரப்படி பாஜக, தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி 131 இடங்களிலும், ஆர்ஜேடி கூட்டணி 103 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

3:04 PM IST

தேஜஸ்வி முதல்வர் ஆவது தவிர்க்க முடியாதது.. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.. அடித்து கூறும் எம்.பி.

இன்னும் சில மணி நேரத்தில் பாருங்கள். நாங்கள் சொன்னதை நிரூபிப்போம் என ஆர்.ஜே.டி எம்.பி. மனோஜ் ஜா தெரிவித்துள்ளார். தேஜஸ்வி முதல்வர் ஆவது தவிர்க்க முடியாதது. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. எங்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியிடாமல் ஊடகங்கள் மறைக்கின்றன என ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.பி.மனோஜ் ஜா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். அதிக இடங்களில் ஆர்ஜேடி கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2:20 PM IST

முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக.. 7 முறை எம்.எல்.ஏவாக இருந்த அப்துல் பாரி சித்திக் தோல்வி

பீகாரில் முதல் வெற்றியை கியோதி தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் முராரி மோகன் ஜா பெற்றுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அப்துல் பாரி சித்திக் தோல்வியடைந்தார். அப்துல் பாரி சித்திக் 7 முறை எம்.எல்.ஏவாக பதவியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2:15 PM IST

ஆர்.ஜே.டி முன்னிலை நிலவரம் இருட்டடிப்பு... எம்.பி மனோஜ் ஜா பரபரப்பு குற்றச்சாட்டு

ராஷ்டீரிய ஜனதா தளம் மட்டும் 86 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆனால், எங்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியிடாமல் ஊடகங்கள் மறைக்கின்றன என ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.பி.மனோஜ் ஜா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

2:10 PM IST

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இல்லை.. இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தவிதமான குளறுபடியும் ஏற்படுவதற்கு வாய்ப்பே கிடையாது. தபால் வாக்குகள் காலை 8 மணிவரை வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளார்.

1:55 PM IST

தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில முழுவதும் 4.1 கோடி ஓட்டுகள் பதிவாகி உள்ள நிலையில் 92 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன.

1:25 PM IST

பீகார் தேர்தல்... வாக்கு எண்ணிக்கை விவரம்

வாக்குச்சாவடி எண்ணிக்கைகள் அதிகரித்ததால் வாக்குச்சுற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மொத்தம் பதிவான 6.8 கோடி வாக்குகளில் 1 கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 73 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

1:20 PM IST

பீகாரில் போட்டியிட்ட 29 இடங்களில் 20 இடங்களில் இடதுசாரிகள் முன்னிலை

பீகாரில் போட்டியிட்ட 29 இடங்களில் 20 இடங்களில் இடதுசாரிகள் முன்னிலை பெற்றுள்ளனர். 

1:15 PM IST

26 தொகுதிகளில் 500 வாக்குகளுக்கும் குறைவாக வித்தியாசம்.. திருப்புமுனை தருமாக பீகார் தேர்தல்

26 தொகுதிகளில் 500 வாக்குகளுக்கும் குறைவாக வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளன. ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி.யு இடையே 5 இடங்களில் 500 வாக்குகளுக்கும் குறைவாக வித்தியாசமும், ஆர்.ஜே.டி மற்றும் பாஜக இடையே 4 தொகுதிகளில் 500 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசமும், காங்கிரஸ் மற்றும் ஜே.டி.யு இடையே 5 இடங்களில் 500 வாக்குகளுக்கும் குறைவாக வித்தியாசமும்,  8 இடங்களில் முன்னிலையில் இருந்த எல்.ஜே.பி தற்போது 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது.

1:05 PM IST

42 தொகுதிகளில் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் கடும் போட்டி

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. பீகாரில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். தற்போது நிலவரப்படி ஜே.டி.யு+ பாஜக- 130 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 102 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி  09 இடங்களிலும், முன்னிலை பெற்றுள்ளது. இதில், 42  இடங்களில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் ஜேடியூ- ஆர்ஜேடி கூட்டணியிடையே கடும் போட்டி நிலவு வருகிறது.  

12:55 PM IST

74 தொகுதிகளில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் கடும் இழுபறி

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. பீகாரில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். தற்போது நிலவரப்படி ஜே.டி.யு+ பாஜக- 130 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 102 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி  09 இடங்களிலும், முன்னிலை பெற்றுள்ளது. இதில், 74 இடங்களில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜேடியூ- ஆர்ஜேடி கூட்டணியிடையே கடும் போட்டி நிலவு வருகிறது.

12:40 PM IST

இன்னும் ஆட்டம் முடியவில்லை.. 170 தொகுதிகளில் ஜேடியூ- ஆர்ஜேடி கூட்டணியிடையே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கடும் போட்டி

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 170 இடங்களில் வெறும் 5000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றனர். 99 இடங்களில் இரு கூட்டணியினரிடையே 2000 வாக்குகள் வித்தியாசமும்,  54 இடங்களில் ஆயிரத்தை விட குறைந்த அளவிலான வித்தியாசம். 28 தொகுதிகளில் வெறும் 500 ஓட்டுகளை விட குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். இறுதி சுற்று முடியும் வரை எந்த மாற்ற வேண்டுமானாலும் ஏற்படலாம்.

12:10 PM IST

பீகார் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பொறுப்பேற்பார்.. பாஜக தேசிய பொதுச் செயலாளர் தகவல்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிதிஷ்குமார் பீகார் மாநில முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பார் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

12:00 PM IST

பீகார் சட்டப்பேரவை தேர்தல்... வெற்றியை நோக்கி நகர்கிறது பாஜக கூட்டணி.. 4வது முறையாக முதல்வராகிறார் நிதிஷ்குமார்?

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 130 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதில், பாஜக 71 இடங்களிலும், ஜேடியு 53 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆர்ஜேடி கூட்டணி 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆர்ஜேடி 61 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, 4 முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

11:55 AM IST

பீகார் சட்டப்பேரவை தேர்தல்.. சிபிஐ (எம்எல்) கட்சி 12 இடங்களில் முன்னிலை..!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணியில் உள்ள சி.பி.ஐ.எம்.எல் கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
11:45 AM IST

மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து முன்னிலை

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ரோக்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்ஜேடி தலைவரும், மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

11:30 AM IST

ஐக்கிய ஜனதா தளத்தை மிஞ்சிய பாஜக.. கூடுதல் தொகுதிகளை கைப்பற்றி அசத்தல்..!

கடந்த 2015ம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக தற்போது 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.தற்போது நடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 63 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மெகா கூட்டணி 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ராஷ்டீரிய ஜனதா தளம் 68 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

11:15 AM IST

நிமிடத்துக்கு நிமிடம் திருப்பம்.. பீகாரில் அடுத்து ஆட்சியை பிடிப்பது யார்?

நிமிடத்துக்கு நிமிடம் திருப்பம் கண்டு வரும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், இழுபறிக்குப் பின் நிதிஷ் - பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்தக் கூட்டணி, பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை நெருங்கிவிட்டது. தேஜஸ்வி - காங்கிரஸ் கூட்டணி 105 இடங்களிலும், நிதிஷ் - பாஜக கூட்டணி 127 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

10:55 AM IST

பீகாரில் பெருபான்மையுடன் பாஜக கூட்டணி... அதகளப்படுத்தும் மோடி சர்கார்..!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை பின்னுக்கு தள்ளி பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக - 130 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 98 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 5 இடங்களிலும், முன்னிலையில் உள்ளன. தற்போது வரை பாஜக கூட்டணி பெருபான்மையுடன் உள்ளது.

10:45 AM IST

பீகார் தேர்தலில் திடீர் திருப்பம்.. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியை பின்னுக்குத் தள்ளிய ஜனதா தளம் கூட்டணி

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு+ பாஜக மற்றும் ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி இடையே  கடும் போட்டி நிலவி வந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக- 125 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 101 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 10 இடங்களிலும், முன்னிலை பெற்றுள்ளது.

10:35 AM IST

ஹசன்பூர் தொகுதி.. லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவு

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத்தின் மகன்கள் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியிலும் முன்னிலை பெற்று வரும் நிலையில், தேஜ் பிரதாப் யாதவ் ஹசன்பூர் தொகுதியிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

10:31 AM IST

பாஜக சார்பில் ஜமுய் தொகுதியில் போட்டியிட்ட திக்விஜய் சிங்கின் மகள் ஸ்ரேயாசி சிங் முன்னிலை

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜமுய் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட துப்பாக்கிச்சூடு வீராங்கனை ஷ்ரேயாசி சிங் முன்னிலை வகித்து வருகிறார். ஸ்ரேயாசி சிங் முன்னாள் அமைச்சர் திக் விஜய் சிங்கின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
10:20 AM IST

எந்த கூட்டணிக்கும் இதுவரை பெருபான்மை கிடைக்கவில்லை... உதிரி கட்சிகளின் ஆதரவு முக்கியத்துவம் பெற வாய்ப்பு?

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு+ பாஜக மற்றும் ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி இடையே  கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக- 109 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 115 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 11 இடங்களிலும், முன்னிலையில் உள்ளன. இதுவரை எந்த கூட்டணிக்கும் பெருபான்மை கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் உதிரி கட்சிகளின் ஆதரவு முக்கியத்துவம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

10:13 AM IST

பார்சா தொகுதி.. 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திரிகா ராய் முன்னிலை

சரண் மாவட்டத்தின் பார்சா தொகுதியில் ஜே.டி.யுவின் சந்திரிகா ராய் முன்னிலை. 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திரிகா ராய், முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
10:10 AM IST

சத்ருஹன் சின்ஹா மகன் பன்கிபூர் தொகுதியில் பின்னடைவு

பன்கிபூர் தொகுதியில் காங்கிரஸ் தலைவரும் சத்ருஹன் சின்ஹாவின் மகனுமான லுவ் சின்ஹாவுக்கு பின்னடைவு சந்தித்து வருகிறார். 

10:07 AM IST

ஜமுய் தொகுதியில் துப்பாக்கிச்சூடு வீராங்கனை ஷ்ரேயாசி சிங் முன்னிலை

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜமுய் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட துப்பாக்கிச்சூடு வீராங்கனை ஷ்ரேயாசி சிங் முன்னிலை வகித்து வருகிறார்.

10:06 AM IST

பீகார் சட்டப்பேரவை தேர்தல்... பாஜக - காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக- 111 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 113 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 09 இடங்களிலும், முன்னிலையில் உள்ளன.

9:16 AM IST

பீகாரில் நிதிஷ்குமார்-தேஜஸ்வி யாதவ் கூட்டணி இடையே கடும்போட்டி..!

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு+ பாஜக மற்றும் ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி இடையே  கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக- 102 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 107 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 07 இடங்களிலும், முன்னிலையில் உள்ளன.

9:16 AM IST

லாலு பிரசாத்தின் மகனும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் முன்னிலை..!

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியிலும், தேஜ் பிரதாப் யாதவ் ஹசன்பூர் தொகுதியிலும் முன்னிலை பெற்றள்ளனர்.

8:48 AM IST

சத்ருஹன் சின்ஹா மகன் பினாக்கிபூர் தொகுதியில் முன்னிலை

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சத்ருஹன் சின்ஹா மகன் காங்கிரஸ் வேட்பாளர் லவ் சின்கா பினாக்கிபூர் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

8:48 AM IST

தொடக்கத்திலேயே நிதிஷை அலறவிடும் தேஜஸ்வி... முன்னிலையில் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு+ பாஜக மற்றும் ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக- 60 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 80 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 05 இடங்களிலும், முன்னிலையில் உள்ளன.

8:48 AM IST

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்... வாக்கு எண்ணிக்கை முறையில் புதிய நடைமுறை..!

பீகார் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இரு வரிசைகள் கொண்ட 7 டேபிள்கள் இருக்கும். ஒரு ரவுன்டில் 14 வாக்கு பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம். ஒவ்வொரு சுற்று முடிவிலும் தேர்தல் முடிவுகள் கரும்பலகையில் எழுதப்படும். ஒரு புறம் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் அமர்ந்திருப்பர். இப்படித்தான் இந்த முறை வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.

8:43 AM IST

பீகாரில் உஷார் நிலையில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள்... எம்.எல்.ஏக்களை பாதுகாக்க தீவிரம்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்குகள் எண்ணும் நிலையில் வெற்றி பெறும் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதில் காங்கிரஸ் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

8:37 AM IST

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்... தொடக்கத்திலேயே அடித்து தூக்கும் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி - 47 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி -41 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

8:28 AM IST

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்... தபால் வாக்கில் சமபலத்துடன் கடும் போட்டி

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 55 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகாரின் 243 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆட்கள் கூடுவதைத் தடுப்பதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி 25 இடங்களிலும், ஜேடியு-பாஜக கூட்டணி 25  இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

8:18 AM IST

பீகாரில் முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளன

தற்போதைய நிலவரப்படி ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களிலும், நிதிஷ்குமார், பாஜக கூட்டணி 10 இடங்களிலும் முன்னிலை உள்ளன.

8:08 AM IST

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாகை சூட போவது யார்? 55 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாகை சூட போவது யார்?  55 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

7:36 AM IST

பீகாரில் ஆட்சி அமைக்கப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை.. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று 8 மணியளவில் எண்ணப்படுகின்றன. முதல்வர் நிதிஷ் குமார், ஆட்சியை தக்க வைப்பாரா அல்லது தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று பிற்பகலில் தெரியவரும்.

9:20 AM IST:

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 125 (பா.ஜ.க. -74, ஜே.டி.யு. -43, வி.ஐ.பி. - 4, ஹெச்.ஏ.எம். - 4)

மகாகட்பந்தன் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 105 (ஆர்.ஜே.டி. - 75, காங்கிரஸ் -19, இடதுசாரிகள் - 16)

ஏ.ஐ.எம்.ஐ.எம். வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 5

லோக் ஜனசக்தி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை : 1

பி.எஸ்.பி. வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 1

சுயேச்சை வெற்றி பெற்றுள்ள தொகுதி எண்ணிக்கை: 1

9:17 AM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்ற பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

9:17 AM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்ற பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

7:10 PM IST:

நிமிடத்துக்கு நிமிடம் மாறும் முன்னணி நிலவரங்களால்  பீகார் தேர்தலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 136 தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்த பாஜக கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெருபான்மை கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது. தற்போது நிலவரப்படி ஜேடியு - பாஜக கூட்டணி 119 தொகுதிகளிலும்,  ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி 116 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.முன்னணி நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் மாறும் 20 தொகுதிகளை கைப்பற்றும் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. 

6:59 PM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், 77 தொகுதிகளில் முன்னிலையுடன் ராஷ்டிரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக நீடிக்கிறது. பாஜக 72 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

6:36 PM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தல் நள்ளிரவுக்கு பிறகே முழுமையான முடிவுகள் தெரிய வரும் என துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தகவல் தெரிவித்துள்ளார்.அங்கீகரிக்கப்பட்ட முடிவுகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

6:34 PM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையை கைப்பற்றுவதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது. 

6:24 PM IST:

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 20 தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி - ஜே.டி.யு கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், பீகார் அரசியலில் இறுதியில் திடீர் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

6:21 PM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஹசன்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தேஜ் பிரதாப் யாதவ் 34,888 வாக்குகளும், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் ராஜ்குமார் ராய் 33,091 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

6:08 PM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக - 5, ஐக்கிய ஜனதா தளம் - 2, ராஷ்டிரிய ஜனதா தளம் - 2 காங்கிரஸ் - 1, விகாஷீல் இன்சான் - 2 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

4:17 PM IST:

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நமக்கு சாதகமான தகவல்கள் வருகிறது. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு தாண்டி நடக்குமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகையால், எவ்வளவு தாமதமானாலும் பூத்தில் இருந்து வேட்பாளர்கள் வெளியேற வேண்டாம். பீகாரில் நம்முடைய ஆட்சிதான் அமையும் என ராஷ்டிரிய ஜனதா தளம் ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளது.

4:03 PM IST:

தர்பங்கா தொகுதியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் லலித் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். 2,141 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதா வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.

3:55 PM IST:

சுபால் தொகுதியில் ஜேடியு வேட்பளார் பிஜேந்திர பிரசாத் யாதவ் 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 1990ல் இருந்து ஒருபோதும் சுபால் தொகுதியில் பிஜேந்திர பிரசாத் தோற்றது இல்லை. சுபால் தொகுதியில் ஜேடியு வேட்பாளர் பிஜேந்திர பிரசாத் 8வது முறையாக வென்றுள்ளார்.

3:52 PM IST:

பீகார் சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல தொகுதிகளில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. கஸ்பா, தராரி, அலி நகர், சீதாமரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் வேட்பாளர்கள் 100 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். கஸ்பா தொகுதியில் 5 வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் முன்னிலையில் இருந்து வருகிறார்.

3:45 PM IST:

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 3 மணிவரை 32 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. பீகாரில் மொத்தம் பதிவான சுமார் 4 கோடி வாக்குகளில் ஒரு கோடியே 28 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இன்னும் 2 கோடி 72 லட்சம் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. தற்போது நிலவரப்படி பாஜக, தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி 131 இடங்களிலும், ஆர்ஜேடி கூட்டணி 103 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

3:04 PM IST:

இன்னும் சில மணி நேரத்தில் பாருங்கள். நாங்கள் சொன்னதை நிரூபிப்போம் என ஆர்.ஜே.டி எம்.பி. மனோஜ் ஜா தெரிவித்துள்ளார். தேஜஸ்வி முதல்வர் ஆவது தவிர்க்க முடியாதது. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. எங்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியிடாமல் ஊடகங்கள் மறைக்கின்றன என ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.பி.மனோஜ் ஜா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். அதிக இடங்களில் ஆர்ஜேடி கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2:24 PM IST:

பீகாரில் முதல் வெற்றியை கியோதி தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் முராரி மோகன் ஜா பெற்றுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அப்துல் பாரி சித்திக் தோல்வியடைந்தார். அப்துல் பாரி சித்திக் 7 முறை எம்.எல்.ஏவாக பதவியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3:02 PM IST:

ராஷ்டீரிய ஜனதா தளம் மட்டும் 86 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆனால், எங்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியிடாமல் ஊடகங்கள் மறைக்கின்றன என ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.பி.மனோஜ் ஜா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

2:13 PM IST:

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இல்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தவிதமான குளறுபடியும் ஏற்படுவதற்கு வாய்ப்பே கிடையாது. தபால் வாக்குகள் காலை 8 மணிவரை வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளார்.

2:03 PM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில முழுவதும் 4.1 கோடி ஓட்டுகள் பதிவாகி உள்ள நிலையில் 92 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன.

1:33 PM IST:

வாக்குச்சாவடி எண்ணிக்கைகள் அதிகரித்ததால் வாக்குச்சுற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மொத்தம் பதிவான 6.8 கோடி வாக்குகளில் 1 கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 73 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

1:30 PM IST:

பீகாரில் போட்டியிட்ட 29 இடங்களில் 20 இடங்களில் இடதுசாரிகள் முன்னிலை பெற்றுள்ளனர். 

1:26 PM IST:

26 தொகுதிகளில் 500 வாக்குகளுக்கும் குறைவாக வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளன. ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி.யு இடையே 5 இடங்களில் 500 வாக்குகளுக்கும் குறைவாக வித்தியாசமும், ஆர்.ஜே.டி மற்றும் பாஜக இடையே 4 தொகுதிகளில் 500 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசமும், காங்கிரஸ் மற்றும் ஜே.டி.யு இடையே 5 இடங்களில் 500 வாக்குகளுக்கும் குறைவாக வித்தியாசமும்,  8 இடங்களில் முன்னிலையில் இருந்த எல்.ஜே.பி தற்போது 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது.

1:16 PM IST:

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. பீகாரில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். தற்போது நிலவரப்படி ஜே.டி.யு+ பாஜக- 130 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 102 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி  09 இடங்களிலும், முன்னிலை பெற்றுள்ளது. இதில், 42  இடங்களில் 500 வாக்குகள் வித்தியாசத்தில் ஜேடியூ- ஆர்ஜேடி கூட்டணியிடையே கடும் போட்டி நிலவு வருகிறது.  

1:10 PM IST:

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. பீகாரில் ஆட்சியை கைப்பற்ற 122 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். தற்போது நிலவரப்படி ஜே.டி.யு+ பாஜக- 130 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 102 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி  09 இடங்களிலும், முன்னிலை பெற்றுள்ளது. இதில், 74 இடங்களில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜேடியூ- ஆர்ஜேடி கூட்டணியிடையே கடும் போட்டி நிலவு வருகிறது.

12:54 PM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 170 இடங்களில் வெறும் 5000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றனர். 99 இடங்களில் இரு கூட்டணியினரிடையே 2000 வாக்குகள் வித்தியாசமும்,  54 இடங்களில் ஆயிரத்தை விட குறைந்த அளவிலான வித்தியாசம். 28 தொகுதிகளில் வெறும் 500 ஓட்டுகளை விட குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். இறுதி சுற்று முடியும் வரை எந்த மாற்ற வேண்டுமானாலும் ஏற்படலாம்.

12:15 PM IST:

ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிதிஷ்குமார் பீகார் மாநில முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பார் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

12:09 PM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 130 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதில், பாஜக 71 இடங்களிலும், ஜேடியு 53 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆர்ஜேடி கூட்டணி 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆர்ஜேடி 61 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, 4 முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

11:59 AM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணியில் உள்ள சி.பி.ஐ.எம்.எல் கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
11:54 AM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ரோக்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்ஜேடி தலைவரும், மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

11:42 AM IST:

கடந்த 2015ம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 53 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக தற்போது 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.தற்போது நடந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 63 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மெகா கூட்டணி 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ராஷ்டீரிய ஜனதா தளம் 68 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

11:24 AM IST:

நிமிடத்துக்கு நிமிடம் திருப்பம் கண்டு வரும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், இழுபறிக்குப் பின் நிதிஷ் - பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்தக் கூட்டணி, பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை நெருங்கிவிட்டது. தேஜஸ்வி - காங்கிரஸ் கூட்டணி 105 இடங்களிலும், நிதிஷ் - பாஜக கூட்டணி 127 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

11:05 AM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை பின்னுக்கு தள்ளி பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக - 130 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 98 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 5 இடங்களிலும், முன்னிலையில் உள்ளன. தற்போது வரை பாஜக கூட்டணி பெருபான்மையுடன் உள்ளது.

10:54 AM IST:

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு+ பாஜக மற்றும் ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி இடையே  கடும் போட்டி நிலவி வந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக- 125 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 101 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 10 இடங்களிலும், முன்னிலை பெற்றுள்ளது.

10:41 AM IST:

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத்தின் மகன்கள் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியிலும் முன்னிலை பெற்று வரும் நிலையில், தேஜ் பிரதாப் யாதவ் ஹசன்பூர் தொகுதியிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

10:31 AM IST:

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜமுய் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட துப்பாக்கிச்சூடு வீராங்கனை ஷ்ரேயாசி சிங் முன்னிலை வகித்து வருகிறார். ஸ்ரேயாசி சிங் முன்னாள் அமைச்சர் திக் விஜய் சிங்கின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
10:24 AM IST:

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு+ பாஜக மற்றும் ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி இடையே  கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக- 109 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 115 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 11 இடங்களிலும், முன்னிலையில் உள்ளன. இதுவரை எந்த கூட்டணிக்கும் பெருபான்மை கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் உதிரி கட்சிகளின் ஆதரவு முக்கியத்துவம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

10:14 AM IST:

சரண் மாவட்டத்தின் பார்சா தொகுதியில் ஜே.டி.யுவின் சந்திரிகா ராய் முன்னிலை. 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த சந்திரிகா ராய், முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
10:11 AM IST:

பன்கிபூர் தொகுதியில் காங்கிரஸ் தலைவரும் சத்ருஹன் சின்ஹாவின் மகனுமான லுவ் சின்ஹாவுக்கு பின்னடைவு சந்தித்து வருகிறார். 

10:08 AM IST:

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜமுய் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட துப்பாக்கிச்சூடு வீராங்கனை ஷ்ரேயாசி சிங் முன்னிலை வகித்து வருகிறார்.

10:07 AM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக- 111 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 113 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 09 இடங்களிலும், முன்னிலையில் உள்ளன.

9:30 AM IST:

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு+ பாஜக மற்றும் ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி இடையே  கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக- 102 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 107 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 07 இடங்களிலும், முன்னிலையில் உள்ளன.

9:17 AM IST:

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியிலும், தேஜ் பிரதாப் யாதவ் ஹசன்பூர் தொகுதியிலும் முன்னிலை பெற்றள்ளனர்.

9:08 AM IST:

9:03 AM IST:

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சத்ருஹன் சின்ஹா மகன் காங்கிரஸ் வேட்பாளர் லவ் சின்கா பினாக்கிபூர் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

8:59 AM IST:

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு+ பாஜக மற்றும் ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக- 60 இடங்களிலும், ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் 80 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். லோக் ஜனதா கட்சி 05 இடங்களிலும், முன்னிலையில் உள்ளன.

8:48 AM IST:

பீகார் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இரு வரிசைகள் கொண்ட 7 டேபிள்கள் இருக்கும். ஒரு ரவுன்டில் 14 வாக்கு பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம். ஒவ்வொரு சுற்று முடிவிலும் தேர்தல் முடிவுகள் கரும்பலகையில் எழுதப்படும். ஒரு புறம் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் அமர்ந்திருப்பர். இப்படித்தான் இந்த முறை வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.

8:43 AM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்குகள் எண்ணும் நிலையில் வெற்றி பெறும் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதில் காங்கிரஸ் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

8:38 AM IST:

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி - 47 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி -41 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

8:28 AM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 55 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகாரின் 243 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆட்கள் கூடுவதைத் தடுப்பதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி 25 இடங்களிலும், ஜேடியு-பாஜக கூட்டணி 25  இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

8:19 AM IST:

தற்போதைய நிலவரப்படி ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களிலும், நிதிஷ்குமார், பாஜக கூட்டணி 10 இடங்களிலும் முன்னிலை உள்ளன.

8:09 AM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாகை சூட போவது யார்?  55 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

8:09 AM IST:

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாகை சூட போவது யார்?  55 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

7:40 AM IST: