பியூட்டி பார்லரில் 5 வெளிநாட்டுப் பெண்களை வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 2 வாடிக்கையாளர்கள் உள்பட 15 பேரை போலீசார்  கைது செய்தனர். சில சினிமா நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகளும் விபச்சார வழக்கில் சிக்க உள்ளனர்.  டெல்லியை அடுத்த குருகிராமில் செக்டார் 29  பகுதியில் இயங்கிவரும் பிரபல அழகு நிலையத்தில் பிராத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர், அங்கு விபச்சாரம் நடைபெறுவதை உறுதி செய்தனர். அதன் பின்னர், 2 போலீசார் வாடிக்கையாளர் போல, அந்த பியூட்டி பார்லருக்கு சென்று, அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதற்கு எவ்வளவு விலை என்று விசாரித்துள்ளனர்.கல்லூரி பெண்கள், திரைப்பட நடிகைகள், சின்னத்திரை நட்சத்திரங்கள், வெளிநாட்டு அழகிகள் என பலரும் தங்களிடம் இருப்பதாகக் கூறிய புரோக்கர்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு விலை எனக் கூறி, விலைப்பட்டியலை விவரித்துள்ளனர். இதைப் பார்த்து, வாயடைத்துப் போன போலீசார், 2 அழகிகள் தேவை என்று கூறியுள்ளனர். அதற்கு முன்பு வரை, பியூட்டி பார்லருக்கு வந்த பெண்கள் போல நடித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென விபச்சார அழகிகளாக மாறி, 2 பேரையும், அவர்கள் போலீசார் என்பதை அறியாமல், அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, அருகில் இருந்த மற்ற 2 அறைகளிலும் வாடிக்கையாளர்கள் 2 பேர் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதை போலீசார் அறிந்து கொண்டனர்.அழகிகளுடன் அறைகளுக்குச் சென்ற போலீசார் 2 பேரும் வெளியில் இருந்த காவல்துறையினரை செல்போன் மூலம் உஷார்படுத்தியுள்ளனர். உடனடியாக உள்ளே அதிரடியாக நுழைந்த காவல்துறையினர், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பெண்கள், மணிப்பூரைச் சேர்ந்த 5 பெண்கள், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண், 2 புரோக்கள் மற்றும் 2 வாடிக்கையாளர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.  அழகு நிலையத்தில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து பெண்களின் விசாவை சோதனை செய்தபோது,  அது காலாவதியாகிவிட்டதையும், விதிகளை மீறி 5 பேரும் இந்தியாவில் தங்கியிருப்பதையும் உறுதி செய்த காவல்துறையினர், தாய்லாந்து தூதரகத்துக்கும் தகவல் அளித்தனர். குருகிராமில் வேறு சில இடங்களிலும் இதுபோல விபச்சாரம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இரவு விடுதிகள் இரண்டிலும் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான முறையில் 2 பெண்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த விபச்சார கும்பலுடன் தொடர்புடைய நடிகைகளுக்கும் போலீசார் வலை விரித்துள்ளனர். விரைவில் அவர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.