Asianet News TamilAsianet News Tamil

14 ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி தாக்குதல் வழக்கு... அதிரடியா வெளியான தீர்ப்பு!!

கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி தீவிரவாத தாக்குதல் வழக்கில்  4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம்.
 

ayodhya terror attack verdict prayagraj court updates
Author
Ayodhya, First Published Jun 18, 2019, 5:58 PM IST

கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி தீவிரவாத தாக்குதல் வழக்கில்  4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம்.

அயோத்தியில் கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பலத்த பாதுகாப்பு நிறைந்த ராம ஜென்ம பூமி மற்றும் பாபர் மசூதி வளாகத்திற்குள் தீவிரவாதிகள் நுழைந்து, பாதுகாப்பு வேலியை தாண்டி, துப்பாக்கியால் சுட்டபடியும், கையெறி குண்டுகளை வீசியபடியும், அவர்கள் முன்னேறினர். தீவிரவாதிகளை முன்னேற விடாமல், பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். 

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த பயங்கர மோதலில் சண்டையில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் தரப்பில் பரிதாபமாக 2 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. 

இந்த அதிபயங்கர தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்தனர் போலீசார். அவர்கள் மீது உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில் 63 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு,  14 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்து, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்,  குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம், ஒருவரை விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios