கடைசியாக சிறுமியை கொலை செய்யும் முன் ஒருமுறை வன்புணர்வு செய்ய வேண்டும் என்று சிறுமியை கொடூரமாக கொன்ற காமக் கொடூரர்கள்.

காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் ஆசிஃபா சிறுமி 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த கொலை சம்பவமும், அந்த சிறுமி வன்புணர்வு பற்றி தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

18 பக்கம் கொண்ட இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் இந்த கோர சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முன்னாள் அரசு அதிகாரி சாஞ்சி ராம் பெயர் இடம்பெற்றுள்ளது. அதேபோல வழக்கில் இரண்டு சிறுவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிஃபா தினமும் காட்டுப்பகுதியில் குதிரை மேய்ப்பதை பலமுறை சாஞ்சி ராமும் அவரது மகன் விஷால், அவனின் நண்பன் பர்வேஷ் ஆகியோர் நோட்டமிட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கடந்த ஜனவரி 10ம் தேதி அந்த சிறுமியை பின்தொடர்ந்து கடத்தி இருக்கிறார்கள். முதலில் குஜ்ஜார் இன மக்களை பயமுறுத்த இப்படி செய்துள்ளனர். கடைசியில் அந்த சிறுவர்களின் விருப்பப்படி பாலியல் கற்பழித்துள்ளார்கள். இந்த வழக்கை முதலில் விசாரித்து, இப்போது கைது செய்யப்பட்டு இருக்கும் தீபக் காஜூரியா என்ற போலீஸுக்கு அந்த சிறுமி எங்கே மறைத்து வைக்கப்பட்டு இருந்தார் என்று முன்பே தெரியுமாம் ஆனால் இதை வெளியே சொல்லாமல் இருக்க 1.5 லட்சம் லஞ்சமாக அவருக்கு சாஞ்சி ராம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இவரும் அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார்.

சிறுமி ஆசிஃபாவிற்கு பலமுறை கொடூரமான மயக்க மருந்து கொடுத்து வன்புணர்வு செய்துள்ளனர். இதை வாங்கி வந்ததே அந்த சிறுவர்கள்தான். அவர்களில் ஒருவனின் தாத்தாவிற்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கும் மயக்க மருந்துகளை தினமும் கொண்டு வந்து, 4 நாட்கள் கோவிலில் வைத்து ஆசிஃபாவை வன்புணர்வு செய்து இருக்கிறார்கள். 

ஆசிஃபாவை தீபக் காஜூரியா கடைசியாக கொலை செய்ய சென்ற போது சிறுவன் விஷால் அவர்களை தடுத்துள்ளான். நான் கடைசியாக அவளை கொலை செய்யும் முன் ஒருமுறை வன்புணர்வு செய்ய வேண்டும் என்று கேட்டு  மீண்டும் வன்புணர்வு செய்துவிட்டு, பின்தான் அந்த சிறுமியை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்கள். 

அந்த பெண்ணின் கழுத்தை அழுத்தி தீபக் காஜூரியா கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அதில் அந்த சிறுமி ஆசிஃபா உயிர் போகவில்லை. இதனால் அந்த விஷால் என்ற சிறுவன், ஆசிஃபாவின் கழுத்தை திருப்பி கொலை செய்துள்ளான். கடைசியாக தலையில் கல்லால் அடித்து மரணம் அடைந்ததை உறுதி செய்து இருக்கிறான். இங்க கோர சம்பவம் நாடுமுழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.