கள்ளக்காதலனை புதுவித செக்ஸ் செய்ய அழைத்து, கட்டிலோடு கட்டிவைத்து இளம்பெண் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாஷம் மாவட்டத்தில் உள்ள போடிலி கிராமத்தைச் சேர்ந்த சேக் சபீர் என்ற இளைஞரும், ஹசீனா என்றஇளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். தவிர்க்க முடியாத சூழலில் இருவரும் வெவ்வேறுநபர்களை திருமணம் செய்து கொண்டாலும், தங்களது கணவன், மனைவிக்கு தெரியாமல் இருவரும் கள்ளக்காதலில் ஈடுபட்டனர்.
 
சேக் சபீர் உள்ளூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்தாலும், ஹசீனாவுடன் கள்ளக்காதலை ஆயுள் முழுவதும் தொடர்வதற்கு முடிவு செய்தார். இதனால், ஹசீனாவுடன் சேர்ந்து சவுதப்பள்ளி கிராமத்தில் கோழிப்பண்ணை ஒன்றை தொடங்கினார். கோழிப்பண்ணைக்கு வரும் இருவரும் அங்கேயே கணவன், மனைவியாக படுக்கையை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
 
பல்வேறு விதமாக செக்ஸ் அனுபவிக்கும் விருப்பமுடைய இருவரையும் கட்டுப்படுத்தவோ, கண்டிக்கவோ கோழிப்பண்ணையில் இல்லாததால், இருவரும் உற்சாகமாக அடிக்கடி படுக்கையை பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில், கோழிப்பண்ணையில் இருந்து கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொள்வதில் சேக் சபீருக்கும், ஹசீனாவுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டது. காவலராக பணிபுரிந்து, அரசாங்க சம்பளம் வாங்கும் சேக் சபீருக்கு சம பங்கு லாபத்தை கொடுக்க விரும்பாத ஹசீனா, படுக்கையை பகிர்ந்து கொள்வதற்காக கூடுதல் லாப வீதத்தை தர வேண்டும் என சேக் சபீரை வலியுறுத்தினார். 
 
ஹசீனாவின் விருப்பத்துக்கு சேக் சபீர் மறுத்துவிட்டதால், இருவருக்கும் இடையே மோதல் உருவானது. இருப்பினும், இருவரும் சமரசம் ஆகி கோழிப்பண்ணையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனிடையே, சேக் சபீர் தனது விருப்பத்திற்கு இணங்காததால், அவரை கொலை செய்ய முடிவு செய்த ஹசீனா, கோழிப்பண்ணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். கோழிப்பண்ணைக்கு சேக் சபீர் வந்ததும் அவருடன் பேசிக் கொண்டிருந்த ஹசீனா, ஆடவரை கட்டிப்போட்டு, பெண் செக்ஸ் கொள்ளும் முறையைக் கூறி, அந்த மாதிரியே தானும் உறவு கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
 
சேக் சபீரும் அதற்கு இணங்கியதால், அவரை கட்டிலில் கட்டிப்போட்ட ஹசீனா, அவருடன் செக்ஸ் வைத்துள்ளார். அதன்பின்னர் தான் ஏற்கெனவே மறைத்துவைத்திருந்த பெட்ரோலை எடுத்து சேக் சபீர் மீது ஊற்றிய ஹசீனா, தீவைத்துக் கொளுத்தினார். இதில் சேக் சபீர் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இதையடுத்து, கோழிப்பண்ணையில் இருந்து தப்பியோடிய ஹசீனா, காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறையினர், ஹசீனாவை சிறையில் அடைத்தனர்.