இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டு ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது காதலி ஸ்லோகா மேத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளி பருவத்தில் இருந்து ஒன்றாகவே படித்த, ஸ்லோகாவை காதலித்து கரம் பிடிக்க போகும் இவர், தற்போது இவருக்கு மிகவும் விலை உயர்ந்த பொருளை பரிசாக கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

தன்னுடைய காதலிக்கு பரிசாக கொடுக்க துபாயில் இருந்து இருக்குமதி செய்யப்பட்ட 'gold platted gozilla' என்கிற தங்கத்தில் ஆன காரை பரிசாக கொடுத்துள்ளார்.

இது சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி ஊற்றி முலாம் பூசப்பட்ட கார் ஆகும். தன்னுடைய வருங்கால மனைவிக்காக பிரத்தேயகமாக இருக்குமதி செய்துள்ள இந்த காரின் விலை மட்டும் 7 கோடி ரூபாய்க்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.