Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகளுக்கு நிம்மதியை தருமா நாளைய பட்ஜெட்?

நாளை வெளியாக உள்ள பட்ஜெட் தாக்குதலில், தொடர்ந்து உள்நாட்டு உற்பத்திகள் உயர்ந்து வருவதால்,  வெளிநாட்டு முதலீடுகளை குறிவைத்து பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

agriculture plans involved in tomorrow budget?
Author
Chennai, First Published Jan 31, 2020, 7:29 PM IST

நாளை வெளியாக உள்ள பட்ஜெட் தாக்குதலில், தொடர்ந்து உள்நாட்டு உற்பத்திகள் உயர்ந்து வருவதால்,  வெளிநாட்டு முதலீடுகளை குறிவைத்து பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் விவசாயத்திற்கு போதுமான  கவனம் செலுத்த வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்ற.

agriculture plans involved in tomorrow budget?

2020-21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்னும் நாளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்ய உள்ளார். 

எனவே இப்போதே, இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றனர். ஏனெனில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் நிலையில், அதை மேம்படுத்துவதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

agriculture plans involved in tomorrow budget?

நடப்பு 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதமாகவும் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது அனைவரும் அறிந்ததே.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் பெரு நிறுவனங்களையும் முதலீட்டாளர்களையும் அதிகமாக நம்பியுள்ள மத்திய அரசு, அவற்றுக்குச் சாதகமான அம்சங்களை இந்த பட்ஜெட்டில் தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. 

இந்தியப் பொருளாதார மதிப்பை 5 லட்சம் கோடி டாலர் மதிப்புக்கு உயர்த்தும் இலக்கை நோக்கிய பயணத்தில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதும், அதிக முதலீடுகளை ஈர்ப்பதும் அவசியமானதாகும். அதன்படி, பெரு நிறுவனங்கள் துறை சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கவும், வரிச் சலுகைகளை அதிகமாக வழங்கவும் அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

agriculture plans involved in tomorrow budget?

இதுகுறித்து முக்கிய அதிகாரி ஒருவர், கூறியுள்ளதாவது... வரிக் கொள்கை உள்ளிட்டவற்றில் முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். 

அதேபோல், வழக்கமாக மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏதுவாக பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios