Asianet News TamilAsianet News Tamil

குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கோங்க !! எச்சரிக்கும் டாக்டர்கள்… நிஃபாவை  அடுத்து தாக்கப் போகும ஷிகெல்லா !!

After Nifa kerala will affect shigella virus one child dead
After Nifa kerala will affect shigella virus one child dead
Author
First Published Jul 24, 2018, 10:08 AM IST


கேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலால் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த காய்ச்சல் அதிக அளவில் குழந்தைகளைத் தாக்கும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டம் என எச்சரித்துள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையினால் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்திற்கு மத்தியில் இப்போது கேரளாவை பெரும் அச்சுறுத்தும் வகையில் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.

After Nifa kerala will affect shigella virus one child dead

குழந்தைகளை வேகமாகத் தாக்கும் ஷிகெல்லா என்ற புதிய பாக்டீரியா தொற்று உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை ஒன்று நேற்று உயிரிழந்துள்ளது. 

கடந்த ஜூன் மாதத்தில் தொற்று பாதிப்பு தொடர்பான எச்சரிக்கையான விடுக்கப்பட்டது. ஏற்கனவே, இந்த தொற்று பாதிப்பு காரணமாக மூவர் உயிரிழந்து உள்ளனர் என கூறப்பட்ட நிலையில், ஜியான் என்ற 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சுத்தமில்லாத உணவு, தண்ணீர் அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்றக்கூடியது இந்த ஷிகெல்லா வைரஸ்  என தெரிவிக்கப்பட்டுள்ளது..

After Nifa kerala will affect shigella virus one child dead

பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு காய்ச்சல், வயிற்றோட்டம் ஏற்படும். கைகளை சுத்தமாக கழுவாவிட்டால், இந்த நோய் எளிதாக பிறருக்கும் தொற்றிக் கொள்ளும் என்பதால், எப்போதும் சுத்தமாக இருப்பதுடன், குழந்தைகளிடம் கைகளை கழுவச்சொல்வது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

பாக்டீரியா பாதிப்பு நேரிட்டு ஒருவார காலம் வழக்கமாக இருக்கும், பின்னர் வயிற்று வலி போன்ற பாதிப்பு நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. ஷிகெல்லா’ வயிற்றுப்போக்கு நோய் மற்றும் மிகவும் தொற்றுக்கூடியது, குறிப்பாக 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தாக்கும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

ஏற்கனவே நிஃபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 20 பேர் உயிரிழந்தனர், இந்த வைரசுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற கேரளாவிற்கு மீண்டும் ஒரு சோதனை காலமாக மாறியுள்ளது. இப்போது ‘ஷிகெல்லா’ பாக்டீரியா அச்சுறுத்தலாக எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios